Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்இந்தியாவிமானப்படை தாக்குதல் பிரிவில் தளபதியாக பெண் நியமனம்; வரலாற்று நிகழ்வு!

    விமானப்படை தாக்குதல் பிரிவில் தளபதியாக பெண் நியமனம்; வரலாற்று நிகழ்வு!

    இந்திய விமானப் படையின் தாக்குதல் பிரிவில் முதல் முறையாகப் பெண் தளபதி நியமிக்கப்பட்டுள்ளார். 

    விமானப் படையின் முக்கிய போர் விமானங்களுக்கு 2016 ஆம் ஆண்டு முதல் பெண் விமானிகள் நியமிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் தற்போது, 1875 பெண் அதிகாரிகள் விமானப் படையில் பணியாற்றி வருகின்றனர். 

    அந்த வகையில் படைத் தளபதி உள்ளிட்ட முக்கியத்துவம் வாய்ந்த மற்றும் கட்டளையிடம் பதவிகளில் பெண்களுக்கு அதிக வாய்ப்பளிக்கும் வகையில் ஷாலிஸா தாமி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.  

    இந்திய விமானப் படையில் பாகிஸ்தானின் எல்லை பகுதியை ஒட்டி அமைந்திருக்கும் மேற்கு படைப் பிரிவுக்கான முதல் பெண் தளபதியாக ஷாலிஸா தாமி நியமனம் செய்யப்பட்டுள்ளார். 

    கடந்த 2003 ஆம் ஆண்டு இந்திய விமானப் படையில் ஹெலிகாப்டர் விமானியாக ஷாலிஸா தாமி பணியில் சேர்ந்தார். இவர் இதுவரை 2,800 மணி நேரம் பல்வேறு விமானங்களில் பறந்து இருக்கிறார். இவர் விமானப் படையின் முதல் பெண் விமான ஓட்டி பயிற்சியாளர் ஆவார். அதே சமயம் ஷாலிஸா தாமி மேற்கு படைப் பிரிவின் ஹெலிகாப்டர் பிரிவுக்கான முதல் பெண் தளபதியாக பணியாற்றி உள்ளார். 

    ஷாலிஸா தாமி தனது சிறப்பான பங்களிப்பிற்காக இரண்டு முறை தலைமை தளபதியின் விருத்தைப் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

    புஷ்பா படத்தின் இரண்டாம் பாகத்தில் சாய்பல்லவி?

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....