Wednesday, March 20, 2024
மேலும்
    Homeசெய்திகள்விளையாட்டுடெஸ்ட் தொடரில் மாஸ் செய்த இந்திய அணி...

    டெஸ்ட் தொடரில் மாஸ் செய்த இந்திய அணி…

    2013 ஆம் ஆண்டு முதல் இந்திய அணியை சொந்த மண்ணில் எந்த ஒரு டெஸ்ட் தொடரையும் இழக்கவில்லை. 

    ஆஸ்திரேலிய அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. நான்கு டெஸ்ட் போட்டிகள் மற்றும் மூன்று ஒரு நாள் போட்டிகளில் விளையாட வந்த ஆஸ்திரேலிய அணி டெஸ்ட் தொடரை விளையாடி முடித்துள்ளது. இத்தொடரில் 2-1 என்ற கணக்கில் இந்திய அணி வெற்றிப்பெற்றது. 

    ஆமதாபாத்தில் நடைபெற்ற கடைசி டெஸ் டிரா ஆனது. ஆமதாபாத் டெஸ்டில் சதமடித்த விராட் கோலி, ஆட்ட நாயகனாகத் தேர்வானார். அஸ்வின், ஜடேஜா ஆகிய இருவருக்கும் தொடர் நாயகன் விருது பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது. 

    இந்நிலையில், இந்த டெஸ்ட் தொடரின் வெற்றி மூலம் 2013 முதல் இன்று வரை இந்திய அணி சொந்த மண்ணில் விளையாடிய 16 டெஸ்ட் தொடர்களிலும் வெற்றி பெற்றுள்ளது.  2013 முதல் இந்திய அணியை எந்த அணியாலும் சொந்த மண்ணில் வீழ்த்த முடியவில்லை. 

    இக்காலக்கட்டத்தில் தோனி, கோலி, ரோஹித் சர்மா ஆகிய கேப்டன்கள் சொந்த மண்ணில் இந்திய அணியின் கேப்டன்களாக செயல்பட்டனர். இறுதியாக, சொந்த மண்ணில் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் 1-2 எனத் தோற்றது இந்திய அணி. 

    இதைத்தொடர்ந்து, மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் மார்ச் 17 ஆம் தேதி முதல் தொடங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

    ‘இதுதான் எனது பெஸ்ட்’ – அனிருத் உணர்ச்சிவசம்; வெளிவந்த தகவல்..

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....