Wednesday, March 20, 2024
மேலும்
    Homeசெய்திகள்விளையாட்டுஇந்தியா vs ஆஸ்திரேலியா: அஸ்வின் சூழலில் சுருண்ட ஆஸ்திரேலியா.. வெற்றி களிப்பில் இந்தியா!

    இந்தியா vs ஆஸ்திரேலியா: அஸ்வின் சூழலில் சுருண்ட ஆஸ்திரேலியா.. வெற்றி களிப்பில் இந்தியா!

    ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் முதல் டெஸ்டை ஒரு இன்னிங்ஸ் மற்றும் 132 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது. 

    ஆஸ்திரேலிய அணி தற்போது இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்துள்ளது. இந்த சுற்றுப்பயணத்தில், ஆஸ்திரேலிய அணி 4 டெஸ்ட் போட்டிகள் மற்றும் மூன்று ஒரு நாள் போட்டிகளில் விளையாடவுள்ளது. 

    இதில், இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான பார்டர் – கவாஸ்கர் டெஸ்ட் தொடரின்  முதல் போட்டி நாக்பூரில் நேற்று தொடங்கியது. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங்கில் களமிறங்கியது. ஆனால், இந்திய பந்துவீச்சாளர்களின் சிறப்பான பந்துவீச்சால், அந்த ஆணி முதல் நாள் ஆட்டத்திலேயே 177 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. 

    இதன்பிறகு, களமிறங்கிய இந்திய அணி  முதல் இன்னிங்ஸில் 139.3 ஓவர்களில் 400 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 223 ரன்கள் முன்னிலை பெற்றது. இந்திய அணி சார்பில் அணி கேப்டன் ரோஹித் சர்மா 120 ரன்களும், அக்ஷர் படேல் 84 ரன்களும், ஜடேஜா 70 ரன்களும் எடுத்தனர். ஆஸ்திரேலிய அணி சார்பில் அறிமுக வீரர் மர்ஃபி 7 விக்கெட்டுகள் எடுத்தார். 

    இதைத்தொடர்ந்து, ஆஸ்திரேலிய அணி தனது இரண்டாவது இன்னிங்ஸில் களமிறங்கியது. அதிக ரன்கள் பின்தங்கியிருந்ததால் அதிரடி அல்லது ஆட்டத்தை டை நோக்கி ஆஸ்திரேலிய பேட்டர்கள் கொண்டு செல்வார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. 

    ஆனால், இந்திய பந்துவீச்சாளர் அஸ்வின் தொடக்கத்திலிருந்து சிறப்பாக பந்துவீசி அணியைக் கவிழ்த்தார். முதல் எட்டு விக்கெட்டுகளையும் சுழற்பந்துவீச்சாளர்கள் எடுத்தார்கள். கடகடவென விக்கெட்டுகளை எடுத்து 5 விக்கெட்டுகளைச் சாய்த்தார் அஸ்வின். 

    மொத்தத்தில், ஆஸ்திரேலிய அணி 32.3 ஓவர்களில் 91 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அஸ்வின் 5 விக்கெட்டுகளையும் ஜடேஜா, ஷமி தலா 2 விக்கெட்டுகளையும் அக்ஷர் படேல் 1 விக்கெட்டையும் எடுத்தார்கள். 

    மேலும், இதன்மூலம் முதல் டெஸ்டை ஒரு இன்னிங்ஸ் மற்றும் 132 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி கைப்பற்றியது. இதனால், 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என முன்னிலையில் உள்ளது இந்திய அணி. இரண்டாவது டெஸ்ட், தில்லியில் பிப்ரவரி 17 அன்று தொடங்கவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

    ஆன்லைன் உணவு டெலிவரி மட்டும் இல்லை.. கஞ்சா டெலிவரியும்தான் – சென்னையில் அதிர்ச்சி!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....