Monday, March 20, 2023
மேலும்
    Homeபிரேக்கிங் நியூஸ்கோலி மற்றும் ரிஷப் பண்ட்க்கு விடுமுறை; ரோஹித் சர்மாவுக்கு புதிய பொறுப்பு - பிசிசிஐ அதிரடி!

    கோலி மற்றும் ரிஷப் பண்ட்க்கு விடுமுறை; ரோஹித் சர்மாவுக்கு புதிய பொறுப்பு – பிசிசிஐ அதிரடி!

    மேற்கிந்திய தீவுகள் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒருநாள் மற்றும் இருபது ஓவர் தொடர்களை விளையாடி வருகிறது. ஒரு நாள் தொடரை இழந்த நிலையில் இருபது ஓவர் தொடரையும் மேற்கிந்திய தீவுகள் அணிகள் இழந்துள்ளது. இந்திய அணி இதன் மூலம் வெற்றிப்பாதையில் திரும்பியுள்ளது.

    West-Indies-tour-of-India-2022-Schedule-Squads

    இந்நிலையில், பிசிசிஐ விராட் கோலி மற்றும் ரிஷப் பண்ட் ஆகியோருக்கு, 10 நாட்களுக்கு விளையாட்டில் இருந்து ஓய்வு அளித்துள்ளது. ஏன் ஏதற்கு இந்த திடீர் ஓய்வு என்று பலரும் குழப்பத்தில் ஆழ, வரும் 24-ம் தேதி முதல் இலங்கை அணிக்கு எதிரான போட்டி தொடர்கள் தொடங்க உள்ள நிலையில் அதில் சிறப்பாக விளையாட வேண்டும் என்பதை கருத்தில் கொண்டு அவர்களுக்கு விடுப்பு அளிக்கப்பட்டுள்ளது என பிசிசிஐ பதில் தந்துள்ளது. 

    virat

    இதன் மூலம் இந்தியா மேற்கிந்திய தீவுகள் அணிக்கு இடையேயான இறுதி இருபது ஓவர் போட்டியில் விராட்கோலி மற்றும் ரிஷப் பண்ட் விளையாடவில்லை. 

    மேலும், விராட் கோலி இலங்கை அணிக்கு எதிரான டி20 தொடரில் களமிறங்காமல் டெஸ்ட் போட்டி தொடரில் மட்டும் பங்கேற்பார் எனவும்  தகவல் வெளியாகி உள்ளது. இலங்கைக்கு எதிரான டெஸ்ட் போட்டிகளில் ரோஹித் சர்மா இந்திய அணியை தலைமை தாங்குவார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது .

    rohith sharma

    இலங்கை அணிக்கு எதிராக அடுத்த மாதம் டெஸ்ட் தொடரில் விளையாட ரோகித் தலைமையிலான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ரோகித் சர்மா (கேப்டன்), பும்ரா (துணை கேப்டன்), மயங்க் அகர்வால், பிரியங் பஞ்சல், விராட் கோலி , ஷ்ரேயாஸ் அய்யர், ஹனுமன் விஹாரி, சுப்மன் கில், ரிஷ்ப் பண்ட், அஸ்வின், ஜடேஜா, ஜெய்ன்ட் யாதவ், குல்தீப் யாதவ், முகமது சமி, சிராஜ் , உமேஷ் யாதவ், சவுரப் குமார், கேஎஸ் பரத் ஆகியோர் இந்த அணியில் இடம்பெறுள்ளனர்.

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    bjp leader

    மகளிர் உரிமை தொகை திமுகவுக்கு ஞாபகம் வந்ததில் மகிழ்ச்சி- பாஜக அண்ணாமலை

    மகளிர் உரிமை தொகை திமுகவுக்கு ஞாபகம் வந்ததில் மகிழ்ச்சி என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.  இந்த ஆண்டுடின் முதல் தமிழ்நாடு சட்டமன்றக் கூட்டம் கடந்த ஜனவரி 9 ஆம் தேதி ஆளுநர்...