Friday, May 3, 2024
மேலும்
    Homeசெய்திகள்இந்தியாமுன்மாதிரியாக விளங்கும் இந்தியா! புகழாரம் சூட்டிய ஜெர்மனி 

    முன்மாதிரியாக விளங்கும் இந்தியா! புகழாரம் சூட்டிய ஜெர்மனி 

    இந்தியா முன்மாதிரியாக விளங்குவதாக ஜெர்மனி புகழாரம் சூட்டியுள்ளது. 

    ஜெர்மனி ஜி7 நாடுகள் குழுவின் தலைமைப் பொறுப்பேற்ற பிறகு, இந்தியாவுக்கு வருகை தர இருப்பதாக அந்நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் அன்னலெனா பேர்பாக் தெரிவித்துள்ளார். 

    இது தொடர்பாக அன்னலெனா பேர்பாக், ஜெர்மனி ஜி7 நாடுகள் குழுவின் தலைமைப் பொறுப்பு வகிக்கும் கடைசி மாதங்களில் இந்தியாவுக்கு வருகை தர இருப்பதாகவும், ஜி20 தலைவர் பதவியை இந்தியா ஏற்ற சில நாட்களில் இந்தப் பயணம் அமையும் என்றும் தெரிவித்தார். 

    மேலும் இந்தியாவுக்கு வரும்போது, தற்போது இருக்கும் சூழ்நிலையில், அவசர கவனம் செலுத்த வேண்டிய காலநிலை நெருக்கடி குறித்தும் விதிகள் அடிப்படையிலான சர்வதேச ஒழுங்கைப் பராமரித்தல் உள்ளிட்டவற்றை குறித்தும் முக்கிய பேச்சு வார்த்தை நடைபெறும் என அவர் கூறினார். 

    தொடர்ந்து பேசிய அன்னலெனா பேர்பாக், வளர்ந்து வரும் பொருளாதார சக்தியாகவும், உறுதியான ஜனநாயகமாகவும் உள்ள இந்தியா
    அனைத்து உள் சமூக சவால்கள் இருந்த போதிலும் உலகின் பல நாடுகளுக்கு முன்மாதிரியாகவும், பாலமாகவும் இருக்கிறது. உக்ரைனில் ரஷ்ய ஆக்கிரமிப்பு போருக்கு எதிராக ஜி20 இருக்கிறது. இந்தியா ஜெர்மனியின் கூட்டணி நாடாக இருக்கிறது. இறுதியில் இந்தியாவுக்கும் நன்றி எனக் கூறினார். 

    இன்று நடைபெறவிருக்கும் ஜி20 மாநாடு தொடர்பான ஆலோசனை கூட்டம்

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....