Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்விளையாட்டுவங்கதேசத்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டி; போராடி தோற்ற இந்தியா

    வங்கதேசத்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டி; போராடி தோற்ற இந்தியா

    இந்திய அணி வங்கதேசத்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் ஒரு விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்துள்ளது.

    இந்திய கிரிக்கெட் அணி வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இந்த சுற்றுப்பயணத்தில், 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரும், 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரும் நடைபெறவுள்ளது. இவற்றுள் நேற்று ஒருநாள் தொடரின் முதல் ஆட்டம் டக்காவில் நடைபெற்றது. 

    இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற வங்கதேசம் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இதைத்தொடர்ந்து இந்திய அணி பேட்டிங்கில் களம் இறங்கியது. இந்திய அணி சார்பில் தொடக்க ஆட்டக்காரர்களாக ரோஹித் சர்மா மற்றும் தவான் ஆகியோர் களமிறங்கினர்.

    தவான் 7 ரன்களுக்கு பெவிலியன் திரும்ப, இதையடுத்து வந்த விராட் கோலியும் 9 ரன்களுக்கு தனது விக்கெட்டை பறிகொடுத்தார். இதனிடையே இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா 27 ரன்களுக்கு அவுட் ஆனார். இதன் பின்பு வந்த இந்திய வீரர்கள் சொதப்பினர். இருப்பினும், கே.எல்.ராகுல் 73 ரன்கள் அடித்து ஆறுதல் அளித்தார். 

    மொத்தத்தில், இந்திய அணி 41.2 ஓவர்களில் 186 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆட்டமிழந்தது. இதைத்தொடர்ந்து, 187 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வங்கதேச அணி களமிறங்கியது. 

    அந்த அணியின் பேட்டிங் வீரர்களும் சொதப்பி வந்தனர். அதிகபட்சமாக வங்கதேச அணியின் கேப்டன் லிட்டன் தாஸ் 41 ரன்கள் குவித்தார். இருப்பினும், இந்திய வீரர்களின் பந்துவீச்சால் 40 ஓவர்களில் 136 ரன்களுக்கு 9 விக்கெட்டுகளை இழந்தது. 

    ஆனால், ஆட்டத்தின் கடைசி கட்டத்தில் ஹசன் முஸ்டாஃபிஸுர் ரஹ்மான் ஆகியோரின் பார்டன்ர்ஷிப் 51 ரன்களை சேர்க்க, வங்கதேசம் 46 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 187 ரன்கள் சேர்த்து வென்றது. ஒரு விக்கெட்டை வீழ்த்த இந்திய அணியினர் எவ்வளவு முயிற்சித்தும் ஈடேறவில்லை. 

    அந்த அணியின் பேட்டர் மெஹதி ஹசன் மிராஸ் ஆட்டநாயகன் ஆனார். மேலும், இரு அணிகளும் மோதும் 2-ஆவது ஒருநாள் போட்டி வரும் 7-ஆம் தேதி டக்காவில் நடைபெறுகிறது.

    “நான் உடற்தகுதியுடன்தான் இருக்கிறேன்” – கேலிகளுக்கு பதிலளித்த மஞ்சிமா மோகன்…

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....