Tuesday, May 7, 2024
மேலும்
    Homeசெய்திகள்விளையாட்டுஅசரவைத்த இந்திய அணி...உலகிலேயே இதுதான் முதல் முறையாம்..

    அசரவைத்த இந்திய அணி…உலகிலேயே இதுதான் முதல் முறையாம்..

    இலக்கை விரட்டுவதில் (சேஸிங் செய்வதில்) இந்திய அணி புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளது. 

    தென்னாப்பிரிக்க அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இந்த சுற்றுப்பயணத்தில் தென்னாப்பிரிக்க அணி 3 இருபது ஓவர் போட்டிகள், 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடவுள்ளது. 

    இருபது ஓவர் போட்டிகளில் 2-1 என்ற கணக்கில் இந்திய அணி வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றியது. இதைத்தொடர்ந்து, தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரின் முதல் ஆட்டத்தில், இந்திய அணி 9 ரன்கள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்க அணியிடம் தோல்வியடைந்தது.

    இதைத் தொடர்ந்து, நேற்று ராஞ்சியில் உள்ள ஜேஎஸ்சிஏ சர்வதேச மைதானத்தில் இரண்டாவது ஒருநாள் போட்டி நடைபெற்றது. இப்போட்டியில், இந்தியா 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இதையும் படிங்கதொடங்கவுள்ள கடைசி ஒருநாள் போட்டி…தொடரைக் கைப்பற்றுமா இந்திய அணி?

    முதலில் பேட்டிங் விளையாடிய தென்னாப்பிரிக்க அணி இந்தியாவுக்கு 279 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. இதைத்தொடர்ந்து, இந்திய அணி 282 ரன்கள் எடுத்து வெற்றிப் பெற்றது. 

    இந்நிலையில் இலக்கை விரட்டுவதில் (சேஸிங் செய்வதில்) இந்திய அணி புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளது. அதன்படி, இதுவரை ஒட்டுமொத்தமாக 300 முறை இலக்கை விரட்டி இந்திய அணி வென்றுள்ளது. இதன் மூலம், முதல் முறையாக ஒரு அணி 300 முறை இலக்கை விரட்டிப்பிடித்துள்ளது என்கிற பெருமையை இந்திய அணி பெற்றுள்ளது. 

    இரண்டாவது இடத்தில் 257 வெற்றிகளுடன் ஆஸ்திரேலியா அணியும், மூன்றாவது இடத்தில் 237 வெற்றிகளுடன் மேற்கிந்திய தீவுகள் அணியும் உள்ளது.

    இதையும் படிங்க:‘ட்ரோனி’ ட்ரோன் கேமராவை அறிமுகம் செய்து வைத்த ‘தோனி’ தல! இதுல என்ன ஸ்பெஷல் தெரியுமா ?  

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....