Saturday, April 27, 2024
மேலும்
    Homeசெய்திகள்விளையாட்டுஇந்தியா vs பாகிஸ்தான்: ஜோராக ஆடிய ஜெமிமா.. வெற்றியைப் பதிவு செய்த இந்தியா!

    இந்தியா vs பாகிஸ்தான்: ஜோராக ஆடிய ஜெமிமா.. வெற்றியைப் பதிவு செய்த இந்தியா!

    மகளிர் உலகக் கோப்பை இருபது ஓவர் கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற போட்டியில் இந்தியா, பாகிஸ்தானை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது.

    சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் நடத்தும் மகளிருக்கான இருபது ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் கடந்த 10-ஆம் தேதி தென்னாப்பிரிக்காவில் தொடங்கியது.  இத்தொடரில் 10 அணிகள் பங்கேற்றுள்ளன. 

    இந்தத் தொடரில் நேற்று இந்திய அணி பாகிஸ்தான் அணியை எதிர்கொண்டது. தென்னாப்பிரிக்காவின் கேப் டவுன் நகரில் நடைபெற்ற இந்தப் போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் பேட்டிங்கை தேர்வு செய்தது.

    பாகிஸ்தான் அணி சார்பில் அதிகபட்சமாக அந்த அணியின் கேப்டன் பிஸ்மா மரூஃப் 68 ரன்களையும், ஆயிஷா நஸீம் 43 ரன்களையும் சேர்த்து இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தனர். 20 ஓவர் முடிவில் பாகிஸ்தான் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 149 ரன்கள் எடுத்தது. 

    இதைத்தொடர்ந்து, 150 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது. தொடக்க வீராங்கனை யஸ்திகா பாட்டியா 17 ரன்களுக்கு பெவிலியன் திரும்ப, ஷஃபாலி வர்மா அதிரடியாக 33 ரன்கள் எடுத்தார். எதிர்பார்க்கப்பட்ட ஹர்மன்பிரீத் கௌர் 16 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். 

    இருப்பினும், ஜெமிமா ரோட்ரிக்ஸ் அதிரடியாக ஆடி 68 ரன்களையும், ரிச்சா கோஷ் 31 ரன்களையும் விளாசினர். இதனால் இந்தியா 19 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 151 ரன்களை எட்டி வென்றது. இந்தியாவின் வெற்றிக்கு வழி வகுத்த ஜெமிமா ரோட்ரிக்ஸ் ஆட்டநாயகி ஆனார்.

    “பொன்னியின் செல்வன்-2” – டிரைலர் மற்றும் இசை எப்போது ரிலீஸ்?

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....