Monday, May 6, 2024
மேலும்
    Homeசெய்திகள்விளையாட்டுஇந்தியாவை வீழ்த்தி வெற்றி வாகையில் தென்னாப்பிர்க்க அணி; முதலிடமும் பறிபோன சோகம்!

    இந்தியாவை வீழ்த்தி வெற்றி வாகையில் தென்னாப்பிர்க்க அணி; முதலிடமும் பறிபோன சோகம்!

    ‘சூப்பர் 12’ சுற்றில் தென்னாப்பிரிக்க அணி இந்திய அணியை வீழ்த்தி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    2022-ம் ஆண்டிற்கான இருபது ஓவர் உலகக் கோப்பை தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. கொஞ்சம் கொஞ்சமாக தீவிரத்தை அடைந்து வரும் இத்தொடரில் அவ்வபோது மழை குறுக்கீட்டு தீவிரத்தை தணித்துவிடுகிறது. 

    இந்நிலையில், நேற்று உலகக் கோப்பை தொடரில் இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இந்த ஆட்டத்தில், இந்திய அணி டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக கே.எல்.ராகுல் மற்றும் ரோஹித் சர்மா களமிறங்கினர். 

    ஆனால், கே.எல்.ராகுல் 9 ரன்களிலும், ரோஹித் சர்மா 15 ரன்களிலும், விராட் கோலி 12 ரன்களிலும் தங்களது ஆட்டத்தை இழக்க, இதர விக்கெட்டுகள் வந்த வேகத்திலேயே பெவிலியன் திரும்பின. சூர்யகுமார் யாதவ் மட்டும் அதிகபட்சமாக 68 ரன்கள் குவித்தார்.

    மொத்தத்தில், இந்திய அணி இருபது ஓவர்களின் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 133 ரன்களை மட்டுமே எட்டியது. தென்னாப்பிரிக்கா தரப்பில் லுன்கி இங்கிடி 4 விக்கெட்டுகளையும், வெய்ன் பார்னெல் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். 

    இதைத்தொடர்ந்து, 134 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென்னாப்பிரிக்க அணி பேட்டிங்கில் களமிறங்கியது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான குவின்டன் டி காக் 1 ரன்னிலும், ரைலீ ருசெப்வ் ரன் எதும் எடுக்காமலும் தங்களது விக்கெட்டுகளை இழந்தனர். இதனால் இந்திய அணிப்பக்கம் வெற்றி திரும்பும் என எதிர்பார்க்கப்பட்டது. 

    ஆனால், அப்படி நடக்கவில்லை. மாறாக,  எய்டன் மார்க்ரம் – டேவிட் மில்லர் கூட்டணி சிறப்பாக விளையாடி 76 ரன்கள் சேர்த்து வெற்றிக்கு அடித்தள மிட்டது. இதில் மார்க்ரம் 52 ரன்களுக்கு வெளியேற, கடைசி விக்கெட்டாக டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 6 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இறுதியில் மில்லர் 59 ரன்களுடனும், வெய்ன் பார்னெல் 2 ரன்களுடன் ஆட்டக்களத்தில் இருந்தனர். தென்னாப்பிரிக்கா 19.4 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 137 ரன்கள் சேர்த்து வென்றது. இதனால், தென்னாப்பிரிக்க அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

    இதன்மூலம், இந்தியா தனது முதல் தோல்வியை 2022-ம் ஆண்டிற்கான இருபது ஓவர் உலகக் கோப்பையில் பதிவு செய்துள்ளது. மறுபுறம் குரூப் ‘2′-இல் இந்தியா இருந்த முதலிடத்தில் தென்னாப்பிரிக்க அணிமுதலிடத்துக்கு முன்னேறியது. தென்னாப்பிரிக்க பெய்லர் லுன்கி இங்கிடி ஆட்டநாயகன் விருதை பெற்றார். 

    இதையும் படிங்க: தேவர் ஜெயந்தி விழா: சென்னையின் முக்கிய இடங்களில் போக்குவரத்து மாற்றம்

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....