Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்இந்தியாதொடங்கியது இறுதி டெஸ்ட்; பிரதமர் மோடியுடன் ஆஸ்திரேலிய பிரதமர் கண்டுகளிப்பு..

    தொடங்கியது இறுதி டெஸ்ட்; பிரதமர் மோடியுடன் ஆஸ்திரேலிய பிரதமர் கண்டுகளிப்பு..

    ஆஸ்திரேலிய பிரதமர் ஆன்டனி ஆல்பனேசி, பிரதமர் நரேந்திர மோடியுடன் இணைந்து கடைசி டெஸ்ட்டின் முதல் நாள் போட்டியை கண்டுகளித்து வருகின்றனர். 

    ஆஸ்திரேலிய அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. நான்கு டெஸ்ட் போட்டிகள் மற்றும் மூன்று ஒரு நாள் போட்டிகளில் விளையாட வந்த ஆஸ்திரேலிய அணி தற்போது வரை மூன்று டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளது. டெஸ்ட் தொடரில் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. 

    நான்காவது மற்றும் இறுதி டெஸ்ட் போட்டியானது இன்று ஆகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் தொடங்கியது. இப்போட்டியில் ஆஸ்திரேலிய அணி டாஸ் வென்று பேட்டிங்கில் ஈடுபட்டு வருகிறது. மேலும், இப்போட்டியில் வெற்றிப்பெற்றால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு இந்திய அணி செல்லும் வாய்ப்பு பிராகசமடையும். இதனால் இந்திய அணி சிறப்பாக விளையாடும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

    இந்நிலையில், இந்தியாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய பிரதமர் ஆன்டனி ஆல்பனேசி, பிரதமர் நரேந்திர மோடியுடன் இணைந்து கடைசி டெஸ்ட்டின் முதல் நாள் போட்டியை காண இன்று குஜராத்திற்கு வருகைத் தந்து, தற்போது போட்டியை கண்டுகளித்து வருகின்றனர். 

    வெளியானது விடுதலை படத்தின் டிரைலர்!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....