Friday, May 3, 2024
மேலும்
    Homeசெய்திகள்விளையாட்டுஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட்; பயிற்சியில் இந்திய அணி!

    ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட்; பயிற்சியில் இந்திய அணி!

    ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடர் வருகிற 9-ஆம் தேதி தொடங்கவுள்ள நிலையில் இந்திய வீரர்கள் தங்களுடைய பயிற்சியைத் தொடங்கியுள்ளார்கள்.

    நியூசிலாந்து அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் செய்து விளையாடியது. இந்தச் சுற்றுப்பயணத்தில் நடைபெற்ற ஒருநாள் தொடரையும், இருபது ஓவர் தொடரையும் இந்திய அணி கைப்பற்றியது. 

    இதைத்தொடர்ந்து, ஆஸ்திரேலியா அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, 4 டெஸ்டுகள், 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறது. இதில், டெஸ்ட் தொடர், வருகிற பிப்ரவரி 9 ஆம் தேதி முதல் தொடங்குகிறது. மேலும், டெஸ்ட் தொடரின் முதல் டெஸ்ட் போட்டி நாகபுரியில் நடைபெறுகிறது. 

    இதை முன்னிட்டு, பெங்களூரில் ஆரம்பக்கட்டப் பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறது ஆஸ்திரேலிய அணி. இப்போட்டியில் அஸ்வினைப் போல பந்துவீச்சு முறையைக் கொண்டுள்ள குஜராத்தைச் சேர்ந்த 21 வயது மஹீஸை வலைப்பயிற்சியில் ஆஸ்திரேலிய அணி ஈடுபடுத்தியுள்ளார்கள்.

    இந்நிலையில் இந்திய வீரர்கள் நாகபுரியில் இன்று வலைப்பயிற்சியைத் தொடங்கியுள்ளார்கள். இதற்கான புகைப்படங்களை பிசிசிஐ வெளியிட்டுள்ளது.

    அவளை கண்ட கல்லுக்கே இந்த நிலைமையா? – சீதா ராமம் பாடல் ஒரு பார்வை 

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....