Thursday, May 2, 2024
மேலும்
    Homeசெய்திகள்தமிழ்நாடுகரூர் காவிரி கதவணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு; பொதுமக்களுக்கு எச்சரிக்கை

    கரூர் காவிரி கதவணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு; பொதுமக்களுக்கு எச்சரிக்கை

    கரூர் மாவட்டம் காவிரி கதவணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால், பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு அம்மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 

    தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்ததால், பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. மேலும் தமிழகத்தின் காவிரி ஆற்றின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.

    இந்நிலையில், கரூர் மாவட்டம் மாயனூர் காவிரி கதவணைக்கு நீர்வரத்து அதிரடியாக அதிகரித்துள்ளது. நேற்று (ஆகஸ்ட் 2) சுமார் 44 ஆயிரம் கன அடியாக இருந்த நீர்வரத்து, இன்று (ஆகஸ்ட் 3) சுமார் 67 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது. 

    நான்கு முக்கிய வாய்க்கால்களில் சுமார் ஆயிரம் கன அடி தண்ணீரும் , காவிரி ஆற்றில் சுமார் 66 ஆயிரம் கன அடி தண்ணீரும் வெளியேற்றப்பட்டு வருகிறது. 

    இந்நிலையில், நீர்வரத்து அதிகரித்துள்ளதால் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு கரூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் நீர் வள ஆதாரங்கள் துறை அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

    சென்னையின் பல இடங்களில் பரவலாக மழை

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....