Monday, May 20, 2024
மேலும்
    Homeவானிலைவங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு

    வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு

    வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

    வடமேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதியில் நிலவும், வளிமண்டல சுழற்சியின் காரணமாக வரும் ஆகஸ்ட் 7-ம் தேதி, குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

    இதுகுறித்து, இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், தென்மேற்கு பருவமழை நாடு முழுவதும் தீவிரமடைந்து வரும் நிலையில், வருகிற ஆகஸ்ட் 7-ம் தேதி உருவாகும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக பருவமழை மேலும், தீவிரம் அடைய வாய்ப்புள்ளது. 

    தமிழகத்தில் கனமழை தொடரும். வளிமண்டல சுழற்சி காரணமாக, தமிழகத்தில் இன்று (ஆகஸ்ட் 5) கனமழை முதல் மிக கனமழைக்கும், நாளை (ஆகஸ்ட் 6) கனமழைக்கும் வாய்ப்புள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    நீலகிரி மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை ஆனால், வால்பாறை, கொல்லிமலையில்?

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....