Wednesday, March 20, 2024
மேலும்
    Homeசெய்திகள்விளையாட்டுதொழில்நுட்ப பிழையால், இந்தியா முதலிடம் - ஐசிசி சொல்வது என்ன?

    தொழில்நுட்ப பிழையால், இந்தியா முதலிடம் – ஐசிசி சொல்வது என்ன?

    ஐசிசியின் இணையதளத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப பிழையால், இந்தியா முதலிடம் பிடித்ததாக கூறப்பட்டுள்ளது. 

    கடந்த 15-ஆம் தேதியன்று ஐசிசி அணி தரவரிசைப் அனைத்து வடிவ கிரிக்கெட் போட்டிகளுக்கான பட்டியல் ஒன்றை வெளியிடப்பட்டது. இப்பட்டியலில்,. இந்தியா 115 ரேட்டிங் புள்ளிகளுடன் முதலிடத்திலும், ஆஸ்திரேலியா 111 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்திலும் இருப்பதாகக் காட்டியது. 

    இதையடுத்து, இந்தச் செய்தியை கிரிக்கெட் ரசிகர்கள் கொண்டாடி தீர்த்தனர். ஆனால், அவர்களுக்கு அதிர்ச்சியளிக்கும் விதமாக, பட்டியல் சில மணிநேரங்களுக்குப் பிறகு புதுப்பிக்கப்பட்டது. அதில் ஆஸ்திரேலியா 126 புள்ளிகளுடன் முதல் இடத்திலும், அதே நேரத்தில் இந்தியா 115 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்திலும் இருந்தது. ஐசிசியின் இணையதளத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப பிழையால், இந்தியா முதலிடம் பிடித்ததாக கூறப்பட்டது. 

    ஆனால், இந்தத் திருத்தமும் தவறானது என்றும், இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்டில் இன்னிங்ஸ் மற்றும் 132 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்த பிறகு, ஆஸ்திரேலியா 4 புள்ளிகளை இழந்து 122 ஆக இருக்கும் என்றும், ஆனால் இந்தப் புதிய திருத்தத்தில் ஆஸ்திரேலியா 126 புள்ளிகளுடன் முதலிடத்தில் இருப்பதாக இன்சைடு ஸ்போர்ட்ஸ் நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.

    தபால் வாக்குகள் சேகரிப்பு; ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அடுத்தக்கட்டம்!

     

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....