Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்தமிழ்நாடுஉளவுத்துறை எச்சரிக்கையை அலட்சியப்படுத்திய காவல்துறை

    உளவுத்துறை எச்சரிக்கையை அலட்சியப்படுத்திய காவல்துறை

    கள்ளக்குறிச்சி வன்முறையை முன்பே கணித்து காவல்துறை அதிகாரிகளுக்கு எச்சரிக்கை விடுத்ததாக தமிழக உளவுத்துறை தெரிவித்துள்ளது. 

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே கனியாமூரில் உள்ள சக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வந்த மாணவி ஶ்ரீமதி கடந்த 13-ம் தேதி பள்ளி விடுதி வளாகத்தில் மர்மமான முறையில் இறந்ததாக கூறப்படுகிறது.  

    இதை தொடர்ந்து, இந்தச் சம்பவம் தொடர்பாக, நான்கு நாள்களாக மாணவியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் சக்தி மெட்ரிக் பள்ளி வளாகத்தின் அருகில் போராட்டம் நடத்தி வந்த நிலையில், கடந்த 17-ம் தேதி போராட்டம் வன்முறையாக மாறியது.

    இந்தச் சம்பவத்தில், வன்முறையாளர்கள் காவல் துறையினர் மீது கற்களை வீசியதாக கூறப்படுகிறது. இதில் காவல்துறையினர் பலர் காயம் அடைந்தனர். மேலும், அங்கிருந்த வாகனங்களும் தீக்கிரையாக்கப்பட்டது. தொடர்ந்து பள்ளிக்குள் நுழைந்தவர்கள் அங்கிருந்த கணினிகள், நாற்காலிகள், ஆவணங்களுக்கு தீ வைத்தனர்.

    மேலும், வன்முறை கட்டுக்கடங்காமல் செல்லவே கூடுதலாக 500 அதிரடிப்படை வீரர்கள் வன்முறை நடைபெற்ற சக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் குவிக்கப்பட்டனர். பெரும் போராட்டத்துக்குப் பிறகு வன்முறையாளர்களை விரட்டியடித்த அதிரடிப்படையினர், கடந்த 17-ம் தேதி பிற்பகல் 3.30 மணியளவில் பள்ளி முழுவதையும் தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.

    இந்நிலையில், கடந்த 21-ம் தேதி தமிழக உளவுத்துறையினர் அறிக்கை ஒன்றை வெளியிட்டனர். அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

    கடந்த 15-ம் தேதியே, அதாவது வன்முறை நடைபெற்ற இரு நாள்களுக்கு முன்பாகவே மாணவர்கள் அமைப்பினர் மற்றும் இன்னும் இதர அமைப்பினர் ஒன்றிணைந்து சக்தி மெட்ரிக் பள்ளியின் மீது தாக்குதல் நடத்த வாய்ப்பு உள்ளது என கள்ளக்குறிச்சி மற்றும் விழுப்புரம் மாவட்ட தலைமை காவல்துறையினரிடம் தெரிவிக்கப்பட்டது. 

    மேலும், இச்சம்பவம் தொடர்பாக விடுக்கப்பட்ட தகவலின் தீவிர தன்மையை உணராமல் காவல்துறையினர் இத்தகவலை அலட்சியப்படுத்திவிட்டனர். 

    இவ்வாறு தமிழக உளவுத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

    இந்நிலையில், கடந்த 21-ம் தேதி தமிழக அரசால் உளவுத்துறை ஐ.ஜி. ஆசியம்மாள் பணியிட மாற்றம் செய்யப்பட்டு அமலாக்கத்துறை ஐ.ஜியாக நியமனம் செய்யப்பட்டார். புதிய உளவுத்துறை ஐ.ஜியாக கே.ஏ.செந்தில் வேலன் நியமனம் செய்யப்பட்டார்.  மேலும் 10 ஐபிஎஸ் அதிகாரிகளும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

    முன்னதாக, கடந்த 20-ம் தேதி கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் பணியிட மாற்றம் செய்யப்பட்டு, கள்ளக்குறிச்சி மாவட்ட புதிய ஆட்சியராக ஷ்ரவன்குமார் ஜடாவத் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

    அதேபோல், கள்ளகுறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வக்குமார் பணியிட மாற்றம் செய்யப்பட்டு காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டார். மேலும், திருவல்லிக்கேணி துணை ஆணையர் பகலவன் கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக நியமனம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

    கள்ளக்குறிச்சி வன்முறைக்கு சமூக வலைதளம் காரணமா?

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....