Sunday, April 28, 2024
மேலும்
    Homeசெய்திகள்இந்தியா10 மாதத்தில் 13 பேரை கொடூரமாக கொன்ற ஆட்கொல்லி புலி சிக்கியது எப்படி?

    10 மாதத்தில் 13 பேரை கொடூரமாக கொன்ற ஆட்கொல்லி புலி சிக்கியது எப்படி?

    மராட்டியத்தில் கடந்த 10 மாதத்தில் 13 பேரை கொன்ற புலியினை வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர்.

    மராட்டிய மாநிலம், கட்சிரோலியில் உள்ள வாட்ஷா வனப்பகுதியில் சுற்றித் திரிந்த`சிடி-1’ என்ற பெயர் கொண்ட புலி, மனிதர்களை அச்சுறுத்தும் விதமாக சுற்றி வந்தது. 

    கடந்த 2021 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல், இந்த மாதம் வரையிலான காலத்தில் அந்த ஆட்கொல்லி புலி 13 மனிதர்களை வேட்டையாடி கொன்றது. 

    இது தொடர்பாக வனத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளதாவது:

    நாக்பூர் வனத்துறை முதன்மை தலைமை காப்பாளர் வனத்துறையினருடன் கடந்த 4 ஆம் தேதி நடத்திய ஆலோசனை கூட்டத்தில், இந்த புலியை விரைவாக பிடிக்கும்படி எதிர்க்கட்சிகளை அவர் வலியுறுத்தினார்.

    இதையும் படிங்க:12 மணிக்கு வீடு ஜப்தி நோட்டீஸ் ! 3 மணிக்கு ரூ.70 லட்சம் பரிசு! மீன் வியாபாரிக்கு அடித்த திடீர் ஜாக்பாட்..

    வாட்ஷாவில் 6 பேர், பாந்த்ரா மாவட்டத்தில் 4 பேர், சந்திராப்பூர் மாவட்டம் பரமாபுரி வனப்பகுதியில் 3 பேர் என விதர்பா மண்டலத்தில் 13 பேரை, அந்தப் புலி கடந்த 10 மாதங்களில் அடித்து கொன்றதது. 

    இதைத்தொடர்ந்து, டபோடா புலிமீட்பு குழு, சந்திராப்பூர் அதிரடிப்படை உள்ளிட்ட பல்வேறு படையினர் இணைந்து பணியாற்றினார்கள். இதையடுத்து, நேற்று காலை வாட்ஷா வனப்பகுதியில் இந்த ஆட்கொல்லி புலியை வனக் குழுவினர் பிடித்தனர். 

    இவ்வாறு, அவர் தெரிவித்தார். 

    பிடிபட்ட அந்த ஆட்கொல்லி புலி நாக்பூரில் உள்ள கோரேவாடா விலங்குகள் மீட்பு மையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....