Friday, May 3, 2024
மேலும்
    Homeபொழுதுபோக்குசினிமா செய்திகள்நடிகர் விஜய் மீதான வரி வழக்கு முடித்துவைப்பு

    நடிகர் விஜய் மீதான வரி வழக்கு முடித்துவைப்பு

    நடிகர் விஜய் வெளிநாட்டில் இருந்து கார் இறக்குமதி செய்யப்பட்டதுக்கான வரி விதிப்பு வழக்கு இன்று முடித்துவைக்கப்பட்டுள்ளது. 

    நடிகர் விஜய் கடந்த 2005-ம் ஆண்டு அமெரிக்காவில் இருந்து சொகுசு கார் ஒன்றை இறக்குமதி செய்தார். இந்தக் கார் ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் சீரிஸ் 1 வகையைச் சேர்ந்தது. நடிகர் விஜய் இந்த காரை வாங்கியபோது இந்த காரின் மதிப்பு 63 லட்சமாகும். இந்த காருக்கு நுழைவு வரி செலுத்துமாறு நடிகர் விஜயிடம் தமிழக அரசின் வணிக வரித்துறை உத்தரவிட்டது. 

    இந்ந உத்தரவை எதிர்த்து, நடிகர் விஜய் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத்தொடரப்பட்டது. இந்த வழக்கில் நுழைவு வரி வசூலிக்க மாநிலங்களுக்கு அதிகாரம் உள்ளது என உயர்நீதிமன்றம் தெரிவித்தது. 

    இதையடுத்து, விஜய் தரப்பில் ரூ.7,98,075 நுழைவு வரி செலுத்தப்பட்டது. இதற்கிடையே, வரி செலுத்தப்படாத இடைப்பட்ட காலத்துக்கான அபராதமாக 30 லட்சத்து 23 ஆயிரத்து 609 ரூபாய் செலுத்த வேண்டும் என கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வணிக வரித்துறை உத்தரவிட்டது.

    வணிக வரித்துறையின் இந்த உத்தரவை எதிர்த்து விஜய் தரப்பில் உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், கார் இறக்குமதி செய்யப்பட்டதில் இருந்து மாதத்துக்கு 2 சதவீதம் என கணக்கிட்டு மட்டுமே அபராதம் விதிக்கப்படுவது வழக்கம் என்றும் ஆனால் விஜய்க்கு 400 சதவீதம் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டது.

    இந்நிலையில், ரோல்ஸ் ராய்ஸ் கார் விவகாரத்தில் அபராதத்தை ரத்து செய்யக்கோரிய நடிகர் விஜய் தாக்கல் செய்த மனு நீதிபதி சுரேஷ்குமார் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது. 

    இந்த விசாரணையில், நடிகர் விஜய் இறக்குமதி செய்த காருக்கு 2019 ஜனவரிக்கு முன் முழு நுழைவு வரியையும் செலுத்தியிருந்தால் அபராதம் விதிக்க கூடாது என நீதிபதி உத்தரவிட்டார். மேலும், இறக்குமதி கார்களுக்கு நுழைவு வரி செலுத்த வேண்டியது கட்டாயம் எனவும் 2019 ஜனவரிக்கு பின்னும் நுழைவு செலுத்தியிருக்காவிட்டால் அபராதம் விதிக்கலாம் எனவும் நீதிபதி சுரேஷ்குமார் கூறினார். 

    இந்தத் தீர்ப்பின் மூலம், நடிகர் விஜய் இறக்குமதி செய்த கார் தொடர்பான வழக்கு முடிந்துள்ளது. 

    இந்தியாவின் கடன் ரூ.139 லட்சம் கோடி- ராகுல் காந்தி

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....