Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்அரசியல்இந்தியாவின் கடன் ரூ.139 லட்சம் கோடி- ராகுல் காந்தி

    இந்தியாவின் கடன் ரூ.139 லட்சம் கோடி- ராகுல் காந்தி

    இந்திய நாட்டின் பொருளாதாரத்தை புள்ளி விவரங்களாக தனது ட்விட்டர் பதிவில் ராகுல் காந்தி வெளியிட்டார். 

    ஒன்றிய அரசின் தவறான பொருளாதார கொள்கையால் நாட்டின் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். மேலும், நாட்டின் கடன் தற்போது ரூ.139 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது.

    இதுகுறித்து, தனது ட்விட்டர் பக்கத்தில் ராகுல் காந்தி புள்ளிவிவரம் அடங்கிய படத்தை வெளியிட்டுள்ளார். அப்புகைப்படத்தில், இந்தியாவின் கடன், வேலைவாய்ப்பின்மை, ரூபாய் மதிப்பு போன்றவற்றில் ஏற்பட்டுள்ள சரிவு குறித்த புள்ளிவிவரங்கள் இடம்பெற்றுள்ளது. 

    “அகங்காரம் பொருளாதரத்தை முட்டுக்கட்டையிட்டால்” என்ற வாக்கியத்துடன் ராகுல்காந்தி பதிவிட்டுள்ள புள்ளிவிவரங்கள் :
    • 2014-ம் ஆண்டில் ரூ. 56 லட்சம் கோடியாக இருந்த இந்திய நாட்டின் கடன் தற்போது ரூ.139 லட்சம் கோடியாக அதிகரித்திருப்பதாகவும், இதனால் நாட்டின் ஒவ்வொரு குடிமகனுக்கான கடன் 2014 இல் ரூ. 44,348 இருந்த நிலையில், அது தற்போது ரூ.1,01,048 ஆக உயர்ந்துள்ளது.
    • 2014 இல் 4.7 சதவீதமாக இருந்த வேலைவாய்ப்பின்மை , தற்போது 7.8 ஆக உயர்ந்துள்ளது.
    • 2014-ம் ஆண்டு ரூ.410 ஆக இருந்த சமையல் எரிவாயு சிலிண்டர் ஒன்றின் விலை தற்போது ரூ.1,053 ஆக உயர்ந்துள்ளது.
    • 2014 இல் டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு ரூ.59 ஆக இருந்த நிலையில், அது தற்போது ரூ.80 ஆக உள்ளது.
    • 135 பில்லியன் டாலராக இருந்த ஏற்றுமதி-இறக்குமதி இடையேயான வர்த்தக பற்றாகுறை தற்போது 190 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது. 

    மேற்கூறிய புள்ளிவிவரங்களை ராகுல் காந்தி தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

    இலங்கை மக்களின் குறைகளை சீர்செய்வது மிகவும் முக்கியம்- ஐ.நா. பொதுச்செயலாளர்

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....