Sunday, April 28, 2024
மேலும்
    Homeசெய்திகள்இந்தியாநாட்டிற்காக வீர மரணம்: ராணுவ வீரர்கள் மத்தியில் மறக்க முடியா வலியை ஏற்படுத்திச் சென்ற "ஜூம்...

    நாட்டிற்காக வீர மரணம்: ராணுவ வீரர்கள் மத்தியில் மறக்க முடியா வலியை ஏற்படுத்திச் சென்ற “ஜூம் நாய்”…!

    உடலில் துப்பாக்கி குண்டுகள் துளைத்த பிறகும் ,சற்றும் அசராமல் இராணுவ வீரர்களுடன் இணைந்து தீவிரவாதிகளை தாக்கிய ,ஜூம் நாய்க்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் சிக்கிச்சை பலனின்றி நேற்று வீர மரணம் அடைந்தது ,ராணுவ வீரர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

    ஜம்மு காஷ்மீரின் அனந்தநாக் மாவட்டத்தில் கோகர்நாக் பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று பாதுகாப்புப் படையினர் பயங்கரவாதிகளை கண்டுபிடிக்கும் முயற்சியில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

    இந்நிலையில், ஒரு வீட்டில் பயங்கரவாதிகள் தங்கியிருப்பதாக தகவல் வந்ததைத் தொடர்ந்து, அந்த வீட்டிற்குள் நுழைவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. ஆலோசனை முடிவில் அந்த வீட்டிற்கு ராணுவ ‘ஜூம்’ நாய் ஒன்று அனுப்பி வைக்கப்பட்டது.

    இதையும் படிங்க:குண்டடி பட்டும் பயங்கரவாதிகளுடன் போராடிய நாய்..! இதுவல்லவா விசுவாசம்..!

    இதனையடுத்து ,  ‘ஜூம்’ சாமர்த்தியமாக பயங்கரவாதிகள் இருந்த அந்த வீட்டிற்குள் மெதுவாக நுழைந்தது. ஜூமைக் கண்ட தீவிரவாதிகள் ,அதனை நோக்கி துப்பாக்கியால் சுட்டுள்ளனர் .இதனால் அதனை இரண்டு துப்பாக்கிக் குண்டுகள் துளைத்தது.

    துப்பாக்கி குண்டுகள் துளைத்த பிறகும் , ‘நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ’ என்பதன்படி தீவிரவாதிகளை தாக்கி அவர்களை நிலைகுலையச் செய்தது.ஜுமின் சமர்த்தியத்தால் ,உடன் சென்ற ராணுவ வீரர்களும் லஷ்கர் இ தொய்பா அமைப்பைச் சேர்ந்த தீவிரவாதிகள் இரண்டு பேரை எளிதாக சுட்டுக்கொன்றனர்.

    இந்த துப்பாக்கிச் ஷூட்டில் ஜுமுடன் இணைந்து ராணுவ வீரர்களும் இருவர் காயமடைந்தனர்.இந்நிலையில், பலத்த காயங்களுடன் மீட்கப்பட்ட ஜூமிற்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் ,நேற்று சிகிச்சை பலனின்றி வீர மரணமடைந்தது.

    நாட்டிற்க்காக ,வீரர்களுடன் இணைந்து போராடிய ஜுமின் மறைவு ராணுவ வீரர்களுக்கு பேரிழப்பாக மட்டுமின்றி ,மிகப்பெரிய சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....