Sunday, April 28, 2024
மேலும்
    Homeசெய்திகள்இந்தியாராஜஸ்தானில் கடும் மழை வெள்ளம் - மக்கள் தவிப்பு

    ராஜஸ்தானில் கடும் மழை வெள்ளம் – மக்கள் தவிப்பு

    ராஜஸ்தான் மாநிலத்தில் இந்தாண்டின் முதல் வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த சில நாள்களாக ராஜஸ்தான் மற்றும் அதன் அண்டை மாநிலங்களான ஜலாவர், தோல்பூர், பாரன் மாவட்டங்கள் ஆகியவற்றில் கன மழை பெய்து வருகிறது.

    பாரன், ஜலாவர் மாவட்டங்களில் நீரால் சூழப்பட்ட பகுதிகளில் இருந்து 50-க்கும் மேற்பட்டோர் இந்திய விமானப் படையின் ஹெலிகாப்டர் மூலம் மீட்கப்பட்டுள்ளனர்.வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்க ராணுவம் வரவழைக்கப்பட்டு இருக்கிறது.

    குறிப்பாக கோட்டா, பாரன், ஜலாவர், புண்டி மாவட்டங்களில் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. மாநிலத்தின் சம்பல், பர்வான், பார்வதி, காளிசிந்த் ஆகிய ஆறுகள் பொங்கிப் பாயும் நிலையில், அணைக்கட்டுகளில் இருந்து உபரிநீர் திறந்துவிடப்பட்டுள்ளது. உதய்ப்பூர், சித்தோர்கர், பிரதாப்கர் ஆகிய நகரங்களின் பல பகுதிகள் நீரால் சூழப்பட்டுள்ளதால் மக்கள் அவதிக்குள்ளாகி இருக்கின்றனர்.அங்கு ராணுவம், துணை ராணுவம், பேரிடர் மீட்பு படையினர் மீட்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

    வெள்ளத்தால் அதிகம் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் பல கிராமங்கள் வெளித்தொடர்பு துண்டிக்கப்பட்டு தனித்தீவுகளாகி உள்ளன. அந்தக் கிராம மக்களுக்கு உணவு, குடிநீர் வழங்குவதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    சம்பல் நதியில் வெள்ளம் அதிகரித்துவரும் நிலையில், கராலி பகுதியில் பல கிராம மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.வெள்ளப் பகுதியில் சிக்கிய 53 பேர் படகுகள் மூலம் மீட்கப்பட்டுள்ளதாகவும், மேலும் 49 பேர் விமானப் படை ஹெலிகாப்டர் மூலம் மீட்கப்படுவார்கள் என்றும் ஜலாவர் மாவட்ட கலெக்டர் பாரதி தீக்சித் கூறினார்.

    மேலும் சில மாவட்டங்களில் சாலைகள் துண்டிக்கப்பட்டு இருப்பதாலும், தண்டவாளங்கள் வெள்ளத்தில் மிதப்பதாலும் போக்குவரத்து முற்றிலுமாக பாதிக்கப்பட்டு இருக்கிறது.

    இந்நிலையில் பன்ஸ்வாரா, துங்கர்பூர் மாவட்டங்களில் கன முதல் மிக கனமழையும், பில்வாரா, சித்தோர்கர் மாவட்டங்களில் கனமழையும் தொடரும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளதால் அம்மாவட்ட மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

    பாரன் மாவட்டத்தின் இருந்து 15 பேரும், மேலும் இரு இடங்களில் இருந்து 81 பேரும் தேசிய, மாநில பேரிடர் மீட்பு படைகளால் மீட்கப்பட்டுள்ளனர் என அம்மாவட்ட கலெக்டர் நரேந்திர குப்தா தெரிவித்துள்ளார்.

    தோல்பூர், ஜலாவர் மாவட்டங்களில் மீட்பு பணியில் ராணுவம் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக மாநில பேரிடர் மேலாண்மை மற்றும் நிவாரணத் துறை செயலாளர் அசுதோஷ் பெட்னேக்கர் கூறியுள்ளார்.

    ஒக்கேனக்கலில் நீர்வரத்து அதிகரிப்பு; குளிக்க தடை நீட்டிப்பு!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....