Friday, May 3, 2024
மேலும்
    Homeபொழுதுபோக்குசினிமா செய்திகள்திருமண பந்தத்தில் இணைந்த இளம் நடிகர்... வாழ்த்துகளை பகிரும் ரசிகர்கள்!

    திருமண பந்தத்தில் இணைந்த இளம் நடிகர்… வாழ்த்துகளை பகிரும் ரசிகர்கள்!

    தென்னிந்திய நடிகர் ஹரிஷ் கல்யாணுக்கு இன்று திருமணம் நடைபெற்றுள்ளது. 

    பிக்பாஸ் நிகழ்ச்சி, பியார் பிரேமா காதல் திரைப்படத்தின் மூலம் பலரையும் கவர்ந்த நடிகர்தான், ஹரிஷ் கல்யாண். தற்போது, நூறு கோடி வானவில், டீசல் போன்ற திரைப்படங்களில் இவர் நடித்து வருகிறார். தொடர்ந்து நல்ல திரைப்படங்களை கொடுத்து வரும் இவருக்கு எப்போது கல்யாணம் என்று பலரும் தொடர்ந்து கேட்டபடியே இருந்தனர். 

    இதைத்தொடர்ந்து, விரைவில் திருமண பந்தத்தில் இணைய உள்ளதாக ஹரிஷ் கல்யாண் தெரிவித்தார். மேலும், நர்மதா உதயகுமார் என்பவரை மணமுடிக்க இருப்பதாகவும் அவர் அறிவித்தார். இருவரும் இணைந்திருக்கும்படியான புகைப்படங்களையும் அவர் சமூகவலைதளத்தில் பதிவிட, அவை அனைத்தும் சமூகவலைதளத்தில் டிரெண்ட் ஆனது. நேற்று ஹரிஷ் கல்யாண் ‘நாளை எனக்கு திருமணம் நடைபெற உள்ளது’ என தெரிவித்திருந்தார். 

    இந்நிலையில், இன்று ஹரிஷ் கல்யாணுக்கும், நர்மதா உதயகுமாருக்கும் திருமணம் நடைபெற்றுள்ளது. இதைச் சார்ந்த புகைப்படங்கள் தற்போது சமூகவலைதளத்தில் வெளியாகியுள்ளன. மேலும், ரசிகர்கள், சினிமா பிரபலங்கள் என பலரும் ஹரிஷ் கல்யாண்-நர்மதா தம்பதியினருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். 

    இதையும் படிங்க: விஜய் ரசிகர்களுக்கு ஹேப்பி நியூஸ்… டிசம்பரில் ‘தளபதி 67’ – வெளியான லேட்டஸ்ட் அப்டேட்

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....