Monday, March 18, 2024
மேலும்
    Homeசெய்திகள்விளையாட்டுகுஜராத் அணியின் தொடர் வெற்றிப்பயணத்திற்கு முற்றுப்புள்ளி வைத்த ஹைதராபாத் - நடந்தது என்ன?

    குஜராத் அணியின் தொடர் வெற்றிப்பயணத்திற்கு முற்றுப்புள்ளி வைத்த ஹைதராபாத் – நடந்தது என்ன?

    சன் ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதிக்கொண்ட போட்டியானது டி.ஓய்.பாட்டில் மைதானத்தில் நடைபெற்றது.  இப்போட்டியில் டாஸ் வென்ற சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியானது, முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. 

    இதனால், முதலில் குஜராத் டைட்டன்ஸ் அணியானது பேட்டிங்கில் களமிறங்கியது. பெரிதும் எதிர்ப்பார்க்கப்பட்ட சுப்மன் கில் 9 பந்துகளுக்கு 7 ரன்கள் மட்டுமே எடுத்து வெளியேறினார். இதன்பின் களமிறங்கிய வேட், சாய் சுதர்சன், மில்லர் ஆகியோர் பெரிதாக ரன்கள் ஏதும் எடுக்காமல் வெளியேற, குஐராத் டைட்டன்ஸ் திணற ஆரம்பித்துவிட்டது. 

    ஒரு புறம் குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா, அரைசதம் விளாசி நம்பிக்கை தந்தார். ஹர்திக் பாண்டியாவுக்கு  21 பந்துகளில் 31 ரன்கள் எடுத்து தன் ரன்களின் மூலம் சற்றே உருதுணையாக இருந்தார், அபினவ் மனோகர். 

    மொத்தத்தில் இருபது ஓவர்களின் முடிவில், குஜராத் டைட்டன்ஸ் அணியானது 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு, 162 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனை அடுத்து 163 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி களமிறங்கியது. 

    ஹைதராபாத் அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய, அபிஷேக் சர்மா மற்றும் கேன் வில்லியம்சன் ஜோடி சிறப்பாக விளையாடி ரன் சேர்த்தனர். அபிஷேக் சர்மா 42 ரன்களில் பெவிலியன் திரும்பினார், கேன் வில்லியம்சன் அரைசதம் கடந்து ஆட்டமிழந்தார். ராகுல் திரிபாதக்கு ஆட்டத்தின் நடுவே ஏற்பட்ட காயத்தின் காரணமா,க இந்த ஆட்டத்தில் இருந்து ரிட்டைர்டு ஆனார்.

    இதன்பின், நிக்கோலஸ் பூரான் அவர்கள் 18 பந்திற்கு 34 ரன்கள் எடுத்து, அணியின் வெற்றிக்கு வித்திட்டார். இதனால், இரு விக்கெட்டுகள் இழப்பிற்கு 19 ஓவரின் முதல் பந்திலேயே வெற்றியை எட்டியது, சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி.

    இதன் மூலம் எட்டு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணியை வீழ்த்தி, சன் ரைசர்ஸ் ஹைதராபாத் தனது இரண்டாவது வெற்றியை ருசித்தது. மேலும், தோல்வியை சந்திக்காத குஜராத் அணி தனது முதல் தோல்வியை சந்தித்துள்ளது. 

    அணியின் வெற்றிக்கு அஸ்திவாரம் அமைத்த கேன் வில்லியம்சன் ஆட்ட நாயகன் விருதைப் பெற்றார். 

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....