Monday, March 18, 2024
மேலும்
    Homeசெய்திகள்இந்தியாபிரதமர் மோடியும் அமெரிக்க அதிபர் ஜோ பைடனும் தீடீர் சந்திப்பு! பேசியது என்ன?

    பிரதமர் மோடியும் அமெரிக்க அதிபர் ஜோ பைடனும் தீடீர் சந்திப்பு! பேசியது என்ன?

    பிரதமர் நரேந்திர மோடியும் அமெரிக்க அதிபர் ஜோ பைடனும் தீடீர் காணொளிக்காட்சி சந்திப்பில் ஈடுபட்டனர். மேலும் இருவரும் ரஷ்யா-உக்ரைன் போர் குறித்தும் இந்தோ-பசுபிக் பிராந்திய பாதுகாப்பு குறித்தும் ஆலோசனை மேற்கொண்டுள்ளனர். 

    பிரதமர் நரேந்திர மோடி, உக்ரைன் நாட்டில் உள்ள புச்சா நகரில் தாக்குதல் நடத்தப்பட்டபோது அப்பாவி குடிமக்கள் கொல்லப்பட்டதை கடுமையாக கண்டித்ததாகவும் இதுகுறித்து பாரபட்சம் அற்ற விசாரணை நடத்தக் கூறியதாகவும் முதலில் சுட்டிக் காட்டி பேசியுள்ளார். 

    மேலும் பிரதமர் நரேந்திர மோடி, ரஷ்யா உக்ரைன் நாடுகளின் அமைதிக்கு இருநாட்டு அதிபர்களிடம் பல முறை பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் உக்ரைனுக்கு தேவையான மருத்துவ பொருட்களை இந்தியாவின் சார்பில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதகாவும் இனியும் மருந்து உள்ளிட்ட நிவாரண பொருள்கள் அனுப்பப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

    இதையடுத்து பேசிய அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இந்திய-அமெரிக்கா இடையே நல்லுறவு வலுவைடைய வேண்டும் என்றும் உக்ரைனுக்கு நிவாரண பொருள்கள் அனுப்பியதற்கு பாராட்டுகள் என்றும் தெரிவித்தார். 

    இது மட்டும் தான் காரணமா? அமெரிக்காவின் இந்த தீடீர் பேச்சுவார்த்தையில் உள் நோக்கங்கள் ஏதேனும் உள்ளதா என்பது கேள்வி தான்! காரணம் இந்தியா தனது நடுநிலையை இன்றளவும் கடைப்பிடித்து வருவது தான். மேலும் உலக நாடுகளில் உள்ள முக்கிய புள்ளிகள் இந்தியாவிற்கு அவ்வப்போது தீடீரென வந்து செல்வதையும் காண முடிகிறது. 

    தற்போது பிரதமர் நரேந்திர மோடியும் அமெரிக்க அதிபர் ஜோ பைடனும் காணொளிக்காட்சியின் மூலமாக பேசியது பல்வேறு கேள்விகளை மக்கள் மனதில் ஏற்படுத்தி உள்ளது.

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....