Tuesday, April 30, 2024
மேலும்
    Homeசெய்திகள்விளையாட்டுடபிள்யுபிஎல்; பெங்களூர் அணியை வீழ்த்திய குஜராத்

    டபிள்யுபிஎல்; பெங்களூர் அணியை வீழ்த்திய குஜராத்

    குஜராத் ஜெயன்ட்ஸ் 11 ரன்கள் வித்தியாசத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியை வீழ்த்தி வெற்றிப்பெற்றது. 

    இந்தியாவில் தற்போது நடைபெற்று வரும் டபிள்யுபிஎல் எனப்படும் மகளிர் ஐபிஎல் தொடரின் நேற்றைய ஆட்டத்தில் குஜராத் ஜெயன்ட்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதின. 

    இப்போட்டியில் முதலில் டாஸ் வென்ற குஜராத் அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது. அந்த அணி சார்பில் சோஃபியா டங்க்லி 65 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். சபினேனி மேக்னா 8 ரன்களுக்கு நடையைக் கட்ட, ஒன் டவுனாக வந்த ஹர்லீன் தியோலும் முனைப்பாக ஆடி  67 ரன்கள் அடித்து அணியின் ஸ்கோரை மேலும் உயர்த்தினார். பின்னர் ஆஷ்லே கார்டனர் 19, ஹேமலதா தயாளன் 16, அனபெல் சதர்லேண்ட் 14, கேப்டன் ஸ்னேஹ ராணா 2 ரன்களுக்கு விக்கெட்டை இழந்தனர்.

    மொத்தத்தில், குஜராத் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 201 ரன்கள் சேர்த்தது. கிம் கார்த் 3, சுஷ்மா வர்மா 5 ரன்களுக்கு ஆட்டமிழக்காமல் இருந்தனர். பெங்களூர் பௌலிங்கில் ஷ்ரேயங்கா பாட்டீல், ஹீதர் நைட் ஆகியோர் தலா 2, மீகன் ஷட், ரேணுகா சிங் ஆகியோர் தலா 1 விக்கெட் சாய்த்தனர்.

    இதையடுத்து 202 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பெங்களூர் அணி களமிறங்கியது. பெங்களூர் அணி சார்பில் அதிகபட்சமாக சோஃபி டிவைன் 66 ரன்கள் எடுக்க, இதர பேட்டர்களில் கேப்டன் ஸ்மிருதி மந்தனா 18, எலிஸ் பெரி 32, ரிச்சா கோஷ் 10, கனிகா அஹுஜா 10, பூனம் கெம்னார் 2 ரன்களுக்கு தங்களது விக்கெட்டை இழந்தனர்.

    இருபது ஓவர்கள் முடிவில் பெங்களூர் அணி 6 விக்கெட்டுகளை இழந்து 190 ரன்களே எடுத்தது. இதன் மூலம் குஜராத் ஜெயன்ட்ஸ் 11 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிப்பெற்றது. ஹீதர் நைட் 11 பந்துகளில் 5 பவுண்டரிகள், 1 சிக்ஸர் உள்பட 30, ஷ்ரேயங்கா பாட்டீல் 11 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். 

    குஜராத் சார்பில் ஆஷ்லே கார்டனர் 3, அனபெல் சதர்லேண்ட் 2, மான்சி ஜோஷி 1 விக்கெட் கைப்பற்றினர்.

    தொடங்கியது இறுதி டெஸ்ட்; பிரதமர் மோடியுடன் ஆஸ்திரேலிய பிரதமர் கண்டுகளிப்பு..

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....