Monday, April 29, 2024
மேலும்
    Homeசெய்திகள்இந்தியாஅத்தியாவசிய பொருள்களின் விலை உயர்வு

    அத்தியாவசிய பொருள்களின் விலை உயர்வு

    ஒன்றிய அரசு மாற்றியமைத்த ஜிஎஸ்டி வரி விகிதங்கள் இன்று முதல் நடைமுறைக்கு வருகிறது. இதன் மூலம் பல்வேறு பொருள்களின் விலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.

    ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் ஜூன் மாதம் நடைபெற்ற ஜிஎஸ்டி கவுன்சிலின் 47வது கூட்டத்தில், அமைச்சர்கள் குழுவின் இடைக்கால அறிக்கையின் அடிப்படையில் பல பொருள்களுக்கு ஜிஎஸ்டி வரியை உயர்த்தவும், சில பொருள்களுக்கு வரியைக் குறைக்கவும் முடிவு செய்யப்பட்டது. இந்த வரி மாற்றம் இன்று முதல் அமலுக்கு வருகிறது.

    இதன்படி, மூட்டைக்குள் அடைக்கப்பட்ட (25 கிலோ வரை) அரிசி, தானியங்கள், பருப்பு, மாவுப்பொருள்கள் இன்று முதல் 5 சதவீதம் வரி விதிக்கப்படுகிறது. மேலும், சில்லறை விற்பனைக்கு ஏற்ற வகையில், சிறு சிறு பொட்டலங்களை உள்ளடக்கிய மூட்டைகளும் ஜிஎஸ்டி வரம்புக்குள் அடங்கும்.

    ஒன்றிய நேரடி வரி வருவாய் வாரியம் இது குறித்து கூறுகையில், முன்கூட்டியே மூட்டையாக கட்டிய உணவுப் பண்டங்கள் விற்பனை செய்தாலும், செய்யாமல் போனாலும், அளவியல் சட்ட விதிப்படி ஒரு குறிப்பிட்ட மூட்டை குறிப்பிட்ட எடையுடையது என அடையாளமிடப்பட்டால் அது ஜிஎஸ்டி வரி வரம்புக்குள் கொண்டுவரப்படும் என தெரிவித்துள்ளது.

    இன்று முதல் ஜிஎஸ்டி வரி உயரும் பொருள்களின் விவரங்கள்:

    உணவுப் பொருள்கள் அளவையியல் சட்ட விதிப்படி, இனி பேக் செய்யப்பட்ட தயிர், மோர், லஸ்ஸி ஆகியவை 5 சதவீத ஜிஎஸ்டி வரிவிகிதத்தில் வருகிறது. இதற்குமுன் இந்த பொருள்களுக்கு வரி விளக்கு அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

    அரிசி, கோதுமை,மாவுப்பொருள்கள், தானியங்கள் மற்றும் பருப்பு மூட்டைகளுக்கு (25 கிலோ வரை) 5 சதவீத ஜிஎஸ்டி வரி விதிக்கப்படுகிறது. இதனால் அரிசி, கோதுமை, பருப்பு ஆகியவற்றின் விலை உயர்கிறது.

    மாம்பழம் தொடர்புடைய பொருள்கள், மாம்பழ சாறு, மாம்பழ கீற்றுகள், உலர வைத்த மாம்பழ கீற்றுகளுக்கு 12 சதவீதம் ஜிஎஸ்டி விதிக்கப்பட்டுள்ளது.எனினும் மாம்பழங்கள் விரி விதிப்புக்குள் கொண்டு வரப்படவில்லை.

    எல்ஈடி விளக்குகள், கத்திகள், பிளேடுகள், இயந்திர பம்புகள் ஆகியவற்றுக்கு 12 சதவீதமாக இருந்த ஜிஎஸ்டி, 18 சதவீதமாக உயர்த்தப்படுகிறது.

    மேலும் 10 கிலோ எடையுள்ள மாவுப்பொட்டலங்கள் அடங்கிய மூட்டைகளும் 5 சதவீத வரிவிதிப்புக்குள் வருகிறது.

    அச்சு பிரதி, எழுத அல்லது வரைவதற்கு பயன்படும் இங்க், வெட்டும் கத்திகள், பென்சில் ஷார்ப்னர், கரண்டிகள், விளக்குகள், வரைவதற்கான உபகரணங்கள் ஆகியவற்றுக்கு 12  சதவீதம் ஜிஎஸ்டி இருந்தது. இது தற்போது 18 சதவீதமாக உயர்த்தப்படவுள்ளது.

    காசோலைகள் வழங்குவதற்கு வங்கிகள் வசூலிக்கும் கட்டணத்துக்கு 18 சதவீத ஜிஎஸ்டி விதிக்கப்பட்டுள்ளது. சாலைகள், பாலங்கள், ரயில்வே, மெட்ரோ, சுத்திகரிப்பு ஆலைகள், மயான கட்டுமான பணி ஒப்பந்தங்களுக்கான ஜிஎஸ்டி, 12 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக உயரத்தப்படவுள்ளது.

    ரிசர்வ் வங்கி, செபி போன்ற ஒழுங்கு நடைமுறை அமைப்புகளின் சேவைகளுக்கு 18 சதவீத ஜிஎஸ்டி விதிக்கப்பட உள்ளது.

    உயிரி மருத்துவ கழிவு சுத்திகரிப்பு அமைப்புகளுக்கு 12 சதவீதம் ஜிஎஸ்டி விதிக்கப்பட்டுள்ளது. ரூ.1000க்கும் குறைவாக ஒருநாள் வாடகை கொண்ட ஹோட்டல் அறைகள், அட்லஸ், போன்ற வரைபடங்களுக்கு 12 சதவீத ஜிஎஸ்டி விதிக்கப்பட உள்ளது.

    சூரிய சக்தியில் இயங்கும் வாட்டர் ஹீட்டர்களுக்கு முன்னதாக 5 சதவீதம் ஜிஎஸ்டி விதிக்கப்பட்டு இருந்தது. இது தற்போது 12 சதவீதமாக உயர்த்தப்பட உள்ளது. மேலும், ரூ.5000க்கும் மேல் ஒருநாள் வாடகை கொண்ட மருத்துவமனை அறைகளுக்கு 5 சதவீத ஜிஎஸ்டி விதிக்கப்பட்டுள்ளது.

    ஜிஎஸ்டி வரி குறைப்பால் விலை குறையும் பொருள்கள்:

    சரக்கு மற்றும் சாலை போக்குவரத்து வாகனங்களுக்கான ஜிஎஸ்டி, 12 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. சரக்கு வாகனங்கள் மற்றும் லாரிகளை வாடகைக்கு எடுப்பதற்கு விதிக்கப்பட்டு வந்த 18 சதவீத ஜிஎஸ்டி, 12 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.

    வடகிழக்கு மாநிலங்கள் மற்றும் மேற்கு வங்கத்தின் பக்தோக்ரா நகரத்தில் இருந்து விமானத்தில் எக்கனாமி வகுப்பில் பயணிப்பதற்கு ஜிஎஸ்டி வரிவிளக்கு அளிக்கப்பட்டுள்ளது. மெருகூட்டப்பட்ட வைரங்களுக்கு 0.25 சதவீதமாக இருந்த ஜிஎஸ்டி, 0.15 சதவீதமாக குறைக்கப்படுகிறது.

    மின்சார வாகனங்களில் பேட்டரி பொருத்தப்பட்டாலும் அல்லது பொருத்தப்படாமல் இருந்தாலும் ஜிஎஸ்டி வரி விதிப்பில் 5 சதவீத சலுகை பெற தகுதி அளிக்கப்பட்டுள்ளது.

    இலங்கை நிலை பற்றி இந்தியாவில் விவாதம் 

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....