Wednesday, March 20, 2024
மேலும்
    Homeசெய்திகள்தமிழ்நாடுதமிழகத்தின் முதல் பல்லுயிர் பாரம்பரிய பகுதி அரிட்டாபட்டி! தமிழக அரசு அரசாணைவெளியீடு

    தமிழகத்தின் முதல் பல்லுயிர் பாரம்பரிய பகுதி அரிட்டாபட்டி! தமிழக அரசு அரசாணைவெளியீடு

    மதுரையில் உள்ள அரிட்டாபட்டி பகுதியை தமிழகத்தின் முதல் பல்லுயிர் பாரம்பரிய பகுதியாக அறிவித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. 

    கடந்த 2020 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம், மதுரை மாவட்டம், அரிட்டாபட்டி, மீனாட்சிபுரம் பகுதியை உள்ளடக்கிய 193.215 ஹெக்டேர் பகுதியை பல்லுயிர் பாரம்பரியப் பகுதியாக தமிழக அரசு அறிவித்தது. 

    இந்நிலையில், உயிர்ப்பன்மையை முக்கியத்துவம் வாய்ந்த இந்தப் பகுதியை தமிழகத்தின் முதல் பல்லுயிர் பாரம்பரிய பகுதியாக அறிவித்து தற்போது தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. 

    அரிட்டாபட்டி பகுதியில் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முந்தைய வரலாற்று பாரம்பரியம் மிக்கதாகவும், இங்கு அரிய வகை பறவை இனங்கள், பூச்சிகள், விலங்கினங்கள் வாழ்ந்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    இந்த அரிட்டாபட்டி மலையின் குகையில் இரண்டாயிரம் ஆண்டுகள் மிகப் பழமையான சமணர் படுக்கையும், தீர்த்தங்கரர் சிற்பமும், தமிழ் பிராமி கல்வெட்டும் காணப்படுகின்றன. மேலும், 1300 ஆண்டுகள் பழமையான வட்டெழுத்து கல்வெட்டும், பாண்டியர் காலத்து குடைவரைக் கோயிலும் காணப்படுகிறது. இந்தப் பகுதிகள் தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது. 

    தங்க நிறத்தில் இவ்வளவு பெரிய மீனா? எங்கு சிக்கியது தெரியுமா?

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....