Tuesday, April 30, 2024
மேலும்
    Homeசெய்திகள்இந்தியாமீண்டும் கூகுள் நிறுவனத்திற்கு ரூ.936.44 கோடி அபராதம்! அதிரடி காட்டிய இந்திய வணிக போட்டி ஆணையம்

    மீண்டும் கூகுள் நிறுவனத்திற்கு ரூ.936.44 கோடி அபராதம்! அதிரடி காட்டிய இந்திய வணிக போட்டி ஆணையம்

    முறையற்ற வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக கூகுள் நிறுவனத்துக்கு இந்திய தொழில் போட்டி கண்காணிப்பு ஆணையம் மேலும் 936.44 கோடி ரூபாய் அபராதம் விதித்துள்ளது. 

    ஆண்ட்ராய்டு அறிதிறன் பேசிகளில் முதன்மை பெற வேண்டும் என்ற நோக்கில் முறையற்ற வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக கூகுள் நிறுவனத்தின் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்தன. இந்தப் புகார்கள் தொடர்பாக இந்திய தொழில் போட்டி ஆணையம் விசாரணை நடத்தியது. 

    சர்வதேச அளவில் பெரும் புகழ்பெற்ற கூகுள் நிறுவனம் சந்தையில் தனக்கு சாதகமான இடத்தை பிடிப்பதற்காக, முறையற்ற வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட்டத்தை அந்த ஆணையம் உறுதி செய்தது. 

    இந்தமுறை கூகுள் பிளே ஸ்டோரில் தனக்குள்ள அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தியதாக 936.44 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. 

    முன்னதாக கடந்த 20 ஆம் தேதி ஆண்ட்ராய்டு இயங்கு தளத்தில் செயல்படும் செல்லிடப்பேசிகளில் தங்கள் நிறுவனத்திற்குள்ள அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியதாக கூகுள் நிறுவனத்துக்கு 1,33.76 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. 

    கூகுள் நிறுவனம் முறையற்ற வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபடுவதை உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும் என இந்திய தொழில் போட்டி ஆணையம் வலியுறுத்தியுள்ளது. 

    இதையும் படிங்க: அந்த கடைசி 3 ஓவர்கள்’: பாகிஸ்தான் ரசிகருக்கு பதிலடி கொடுத்த சுந்தர் பிச்சை., மாஸான சுவாரஷ்ய பதிவு…

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....