Monday, April 29, 2024
மேலும்
    Homeசெய்திகள்வர்த்தகம்பண்டிகை காலத்திலும் குறைந்து வரும் தங்கத்தின் விலை: மகிழ்ச்சியில் நகைப்பிரியர்கள்

    பண்டிகை காலத்திலும் குறைந்து வரும் தங்கத்தின் விலை: மகிழ்ச்சியில் நகைப்பிரியர்கள்

    தீபாவளி பண்டிகைக்காக பலரும் தங்கம் வாங்க திட்டமிட்டுவது வழக்கம் .அந்த வகையில் ,கடந்த சில நாட்களாக அதிகரித்து வந்த தங்கத்தின் விலை ,தற்போது தொடர்ந்து குறைந்து வருவது நகை பிரியர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .

    சென்னையில் நேற்று முன் தினம் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 40 ரூபாய் குறைந்து 37,600 – ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.

    அதேபோல் நேற்று சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 120 ரூபாய் குறைந்து 37,480 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. வெள்ளியும் ஒரு கிலோ ரூ.61,000க்கு விற்பனை செய்யப்பட்டது.

    இந்நிலையில் சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 160 ரூபாய் குறைந்து 37,320 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.20 குறைந்து, ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை 4,665 -ரூபாய்க்கு விற்பனை ஆகிறது.

    இதையும் படிங்க: பயணிகள் கவனத்திற்கு, தீபாவளியை முன்னிட்டு இன்று முதல் தமிழகத்தில் 16,888 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

    இன்றைய நிலவரப்படி, 24 காரட் தங்கத்தின் விலை, கிராம் ஒன்றிற்கு 20 ரூபாய் குறைந்து 5,067 ரூபாய்க்கும், சவரனுக்கு 160 ரூபாய் குறைந்து 40,536 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. வெள்ளி கிராமுக்கு 50 காசுகள் அதிகரித்து ரூ.61.50 காசுகளுக்கும், ஒரு கிலோ வெள்ளியின் விலை 500 ரூபாய் அதிகரித்து 61,500 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

    தங்கம் விலை : சென்னை

    22 காரட் தங்கம் கிராமிற்கு 20 குறைந்து 1 கிராம் – ரூ. 4,665

    22 காரட் தங்கம் சவரனுக்கு 160 குறைந்து 8 கிராம் – ரூ.37,320

    24 காரட் தங்கம் கிராமிற்கு 20 குறைந்து 1 கிராம் – ரூ.5,067

    24 காரட் தங்கம் சவரனுக்கு 160 குறைந்து 8 கிராம் – ரூ. 40,536

    அமெரிக்க டாலரின் மதிப்பு அதிகரித்து வருவதால் ஃபெடரல் வங்கி மீண்டும் வட்டி விகிதத்தை உயர்த்தும் என்ற நம்பிக்கையில் ,முதலீட்டாளர்கள் வட்டி இல்லாத தங்கத்தில் முதலீடு செய்வதை நிறுத்திக் கொண்டுள்ளனர் . இதன் காரணமாகவே தங்கத்தின் விலையில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.பண்டிகை காலத்தை முன்னிட்டு உள்நாட்டில் விற்பனை அதிகரித்தாலும், தங்கத்தின் விலை அதிகரிக்காதது பொது மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது .

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....