Wednesday, May 1, 2024
மேலும்
    Homeசெய்திகள்இந்தியாபுதுச்சேரியில் இருந்து தமிழகத்தின் முக்கிய நகரங்களுக்கு சிறிய ரக விமானங்கள்

    புதுச்சேரியில் இருந்து தமிழகத்தின் முக்கிய நகரங்களுக்கு சிறிய ரக விமானங்கள்

    புதுச்சேரியில் இருந்து தமிழகத்தின் முக்கிய நகரங்களுக்கு 19 இருக்கைகள் கொண்ட சிறிய ரக விமானங்கள் விரைவில் இயக்கப்பட உள்ளன. 

    புதுச்சேரி மற்றும் தமிழகத்தில் உள்ள பல முக்கிய மாவட்டங்களை இணைக்கும் வகையில், ஏர் சஃபா விமான சேவை நிறுவனம், வருகிற தீபாவளி பண்டிகை முதல் சிறிய ரக விமானங்களை இயக்க திட்டமிட்டுள்ளது. 

    இந்தத் திட்டத்தின்படி புதுச்சேரியில் இருந்து சென்னை, வேலூர், மதுரை, கோவை, திருச்சி, தூத்துக்குடி உள்ளிட்ட முக்கிய நகரங்களுக்கு குறைந்த கட்டணத்தில் விமானத்தில் பயணிக்க பொதுமக்களுக்கு வாய்ப்பு கிடைக்க உள்ளது. 

    ஒரு பயணத்துக்கு ஒரு நபருக்கு 2 ஆயிரம் ரூபாய் முதல் 2,500 ரூபாய் வரை கட்டணங்கள் நிர்ணயிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பயணிகளின் வரவேற்பைத் பொருத்தே நாள்தோறும் ஒரே வழித்தடத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட விமானங்கள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    குறிப்பாக புதுச்சேரி-சென்னை இடையே காலை மற்றும் மாலை என இரண்டு நேரங்களில் விமானங்கள் இயக்கப்பட உள்ளன.

    இதுகுறித்து ஏர் சஃபா மேலாண் இயக்குநர் கே.முருகப்பெருமாள் கூறுகையில், தாங்கள் பெரிய விமான ஆப்பரேட்டர்களுடன் போட்டியிடவில்லை எனவும், இருப்பினும் தங்களுடையது அவர்களின் இயக்கத்திற்கு துணையாக இருக்கும் எனவும் தெரிவித்தார். 

    மேலும் இதுவரை செக் குடியரசிடம் இருந்து 5 விமானங்களை முன்பதிவு செய்து இருப்பதாகவும், அவை விரைவில் தமிழகம் வரும் எனவும் தெரிவித்துள்ளார்.

    மு.க.ஸ்டாலின் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் – கொதித்த அதிமுக

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....