Saturday, May 4, 2024
மேலும்
    Homeசெய்திகள்இந்தியாபாலின சமத்துவத்தில் இந்தியா முன்னேற்றம்!

    பாலின சமத்துவத்தில் இந்தியா முன்னேற்றம்!

    நடப்பு ஆண்டுக்கான சர்வதேச பாலின இடைவெளி குறியீட்டை உலக பொருளாதார மையம் அண்மையில் வெளியிட்டது.

    சர்வதேச அளவில் பொருளாதார பங்கேற்பு, கல்வி பெறுதல், அரசியல், அதிகாரம் உள்ளிட்டவற்றில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையே காணப்படும் இடைவெளியை ஆய்வு செய்து, உலக பொருளாதார மையம் ஆண்டுதோறும் அறிக்கை வெளியிட்டு வருகிறது.

    அந்தவகையில், இந்த ஆண்டும் உலக பொருளாதார மையம் அறிக்கை வெளியிட்டுள்ளது. 146 நாடுகளில் நடத்தப்பட்ட ஆய்வில் இந்தியாவுக்கு 135-வது இடம் கிடைத்துள்ளது. 

    கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் இந்த ஆண்டு இந்தியா, பாலின இடைவெளி குறியீட்டு பட்டியலில் 5 இடங்கள் முன்னேறி இருக்கிறது. இருப்பினும், கடந்த 16 ஆண்டுகளாக பாலியல் சமத்துவமின்மையில் இந்தியா மோசமான நிலையிலேயே இருப்பதாக உலகக் பொருளாதார கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. 

    பாலின சமத்துவமின்மை விகிதம் 5 சதவீதத்துக்கும் அதிகமாக உள்ள 5 நாடுகளில் இந்தியாவும் இடம்பெற்றுள்ளது. மீதமுள்ள நாடுகளாக கத்தார், பாகிஸ்தான், அஜர்பைஜான், சீனா ஆகிய நாடுகள் இடம்பெற்றுள்ளது. 

    இந்தப் பட்டியலில், ஐஸ்லாந்து, பின்லாந்து, நார்வே, ஸ்வீடன் ஆகிய நாடுகள் முதல் 4 இடங்களை பிடித்துள்ளன. அதேபோல், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், காங்கோ, ஈரான், சாடு ஆகிய நாடுகள் கடைசி 5 இடங்களில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

    மக்கள்தொகையில் சீனாவை தோற்கடிக்குமா இந்தியா?

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....