Saturday, March 16, 2024
மேலும்
    Homeசெய்திகள்தமிழ்நாடுஆதரவற்ற முதியவரின் ஆடையை உருவி பணத்தை பறித்த கஞ்சா ஆசாமிகள் - அதிர்ச்சி வீடியோ

    ஆதரவற்ற முதியவரின் ஆடையை உருவி பணத்தை பறித்த கஞ்சா ஆசாமிகள் – அதிர்ச்சி வீடியோ

    சென்னையில் தெருவோரம் இருந்த ஆதரவற்ற முதியவரை தாக்கி நிர்வாணமாக்கி, பணம் பறித்த 2 கஞ்சா ஆசாமிகளின் செயல், சிசிடிவி காட்சிகளாக வெளியாகியுள்ளது. 

    சென்னை, ஆலந்தூர் பகுதிகளில் கஞ்சா போதை ஆசாமிகளின் அராஜகம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்த ஆசாமிகள் பைக் திருடுவது, கடைகளின் பூட்டை உடைத்து திருடுவது போன்ற சம்பவங்களில் ஈடுபட்டு வருகின்றனர். 

    இதன் ஒரு பகுதியாக நேற்று (அக்டோபர் 14) காலை ஆலந்தூர் மண்டி தெருவில் சாலையோரம் அமர்ந்திருந்த முதியவரிடம் இரண்டு கஞ்சா போதை இளைஞர்கள் சென்று பணம் கேட்டு மிரட்டினர்.

    அந்த முதியவர் பணம் தர மறுத்ததால் அவரை தர தரவென இழுத்து சாலையில் போட்டு அடித்தனர். அதில் ஒரு ஆசாமி முதியவரின் ஆடையை அவிழ்த்துக் கொண்டு ஓடியுள்ளார்.

    இதையும் படிங்க: வெள்ளத்தில் தப்பியும் ‘தீ’ விடவில்லை? 12 குழந்தைகள் உட்பட 21 பேரின் உயிரை பறித்த பேருந்து விபத்து…

    மற்றொரு ஆசாமி அருகில் இருந்த மண்பானையை எடுத்து முதியவரின் தலையில் உடைத்து அவரை காயப்படுத்தினார். இதனால், காயமடைந்த முதியவர் ரத்த வெள்ளத்தில் மயக்க நிலைக்கு சென்றார்.

    இருப்பினும், போதை வெறி அடங்காத அந்த மர்ம ஆசாமி, முதியவர் மீது ஏறி அமர்ந்து கொண்டு தலையில் பலமாக தாக்கினார். இதில் முதியவர் மயக்கம் அடைந்தார். அதன்பிறகு, அங்கிருந்து அந்த ஆசாமியும் சென்று விட்டார்.

    பின்னர் அவ்வழியாக வந்த மக்கள், ரத்த வெள்ளத்தில் இருந்த முதியவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை மீட்ட சிலர் இச்சம்பவம் குறித்து பரமங்கி மாலை காவல் நிலையத்தில் புகார் அளிப்பதாக தகவல் தெரிவித்தனர்.

    இது போன்ற கஞ்சா ஆசாமிகளின் செயல்பாட்டால், அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் பெரும் பயத்தில் சாதாரணமாக வெளியே வரவே யோசிக்கின்றனர். மேலும், இதுகுறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....