Thursday, May 2, 2024
மேலும்
    Homeசெய்திகள்விளையாட்டுஇரு சுற்றுகளிலும் வெற்றி; இந்திய செஸ் வீரர் பிரக்ஞானந்தா முன்னிலை

    இரு சுற்றுகளிலும் வெற்றி; இந்திய செஸ் வீரர் பிரக்ஞானந்தா முன்னிலை

    மியாமியில் நடைபெறும் செஸ் போட்டியில் பிரக்ஞானந்தா 2.5-1.5 என்கிற புள்ளிக்கணக்கில் அனிஷ் கிரியை இரண்டாவது சுற்றில் வீழ்த்தினார்.

    சென்னை மாமல்லபுரத்தில் நடைபெற்ற செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கு பிறகு அமெரிக்காவின் மியாமியில் நடைபெறும் எஃப்டிஎக்ஸ் கிரிப்டோ கோப்பைப் போட்டியில் கலந்துகொண்டு தற்போது விளையாடி வருகிறார் இந்தியாவின் பிரபல செஸ் வீரர் பிரக்ஞானந்தா.

    இந்த போட்டியில், முதல் சுற்றில் உலகின் தலை சிறந்த ஜூனியர் வீரர் அலிரேஸா ஃபிரோஜாவை 2.5-1.5 என்ற கணக்கினில் முன்னதாக வீழ்த்தினார் பிரக்ஞானந்தா.

    இந்நிலையில், இரண்டாவது சுற்றில் பிரபல வீரர் அனிஷ் கிரியை எதிர்கொண்டார் பிரக்ஞானந்தா. முதல் ஆட்டத்தில் தோல்வி பெறும் நிலையில் இருந்து தப்பித்து டிரா செய்தார் பிரக்ஞானந்தா. இதையடுத்த இரு ஆட்டங்களும் டிரா ஆயின. இச்சூழலில், கடைசி ஆட்டத்தில் அபாரமாக விளையாடி வெற்றி பெற்ற பிரக்ஞானந்தா 2.5-1.5 என்கிற புள்ளிக்கணக்கில் அனிஷ் கிரியை இரண்டாவது சுற்றில் வீழ்த்தினார்.

    8 வீரர்கள் விளையாடும் எஃப்டிஎக்ஸ் கிரிப்டோ கோப்பைப் போட்டியில் கார்ல்சனுடன் முதல் இடத்தில் உள்ளார் இந்திய வீரர் பிரக்ஞானந்தா.

    ஒக்கேனக்கலில் பரிசல் இயக்க அனுமதி!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....