Sunday, April 28, 2024
மேலும்
    Homeசெய்திகள்உலகம்ஜப்பானின் முன்னாள் பிரதமர் மீது துப்பாக்கிச்சூடு

    ஜப்பானின் முன்னாள் பிரதமர் மீது துப்பாக்கிச்சூடு

    ஜப்பான் நாட்டின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே துப்பாக்கியால் சுடப்பட்டுள்ளார். காயமடைந்த  ஷின்சோ, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

    ஜப்பான் நாட்டில் வருகிற ஞாயிற்றுக் கிழமை நடைபெற உள்ள மேல்சபைத் தேர்தலையொட்டி, ஜப்பானில் உள்ள நாரா எனப்படும் நகரத்துக்கு லிபெரல் டெமோகிராடிக் பார்ட்டி (LDP) எனப்படும் கட்சிக்கு ஆதரவாக பேசிக்கொண்டிருந்த போது, அவரின் நெஞ்சுப்பகுதியில் சுடப்பட்டுள்ளார்.

    அவர் பேசிக்கொண்டிருந்த போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தெளிவாக உள்ளது. அந்த புகைப்படத்தில், சொற்பொழிவை நின்று கவனிப்போரும், நடந்து செல்வோரும் தெளிவாக உள்ளனர்.

    இந்த துப்பாக்கிச்சூடு தொடர்பாக ஜப்பான் காவல்துறையினர் டெட்சுயா யமாகாமி எனப்படும் நபரைக் கைது செய்துள்ளனர். 40 வயதாகும் டெட்சுயா யமாகாமி, துப்பாக்கிச்சூடு நடைபெற்ற நாராவில் வசித்து வருகிறார். முன்னாள் பிரதமரை சுட்ட பின்பு தப்பிச் செல்வதற்கு அவர் முயலவில்லை எனவும், தானே தயாரித்த துப்பாக்கியைக் கொண்டு முன்னாள் பிரதமர் ஷின்சோ அபேவை சுட்டதாகவும் ஜப்பான் நாட்டு செய்தி ஊடகங்கள் தெரிவிக்கின்றன. தற்போது காவலர்கள் அவரை விசாரித்து வருகின்றனர்.

    இந்நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ஷின்சோ அபேவின் உடல்நிலை மிக மோசமாகி உள்ளது. ஜப்பான் நாட்டின் முன்னாள் பிரதமர் உயிரைக் காப்பாற்றுவதற்கு தங்களால் முடிந்த அளவு மருத்துவர்கள் முயன்று வருகின்றனர்.

    இந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக ஜப்பானில் உள்ள அமரிக்க தூதரகமானது தனது ட்விட்டரில், ‘மிகவும் அதிர்ச்சியாக உள்ளது. இந்த சம்பவம் குறித்து நங்கள் மிகவும் வருந்துகிறோம்; ஷின்சோ அபே விரைவில் குணமடைய வேண்டுகிறோம்.’ என பதிவிட்டுள்ளனர்.

    ஷின்சோ அபே சுடப்பட்ட சம்பவம் குறித்து ஜப்பான் நாட்டின் தற்போதைய பிரதமர் கிஷிதா இன்று பேசவுள்ளதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ஜப்பான் நாட்டில் துப்பாக்கி கலாசாரம் என்பது மிகவும் அரிதாகவே நடக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

    முன்னாள் அமைச்சருக்கு தொடர்பான 49 இடங்களில் வருமான வரிச்சோதனை

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....