Saturday, May 4, 2024
மேலும்
    Homeசெய்திகள்இந்தியாமுன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து

    முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து

    சென்னை: முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள கா என்ற கிராமத்தில் கடந்த 1932 ஆம் ஆண்டு செப்டம்பர் 26 ஆம் நாள் பிறந்தார். இவர் பஞ்சாப் பல்கலை கழகம், கேம்பிரிட்ஜ் மற்றும் ஆக்ஸ்போர்ட் பல்கலை கழங்கங்களிலும் படித்து பட்டம் பெற்றவர் ஆவர்.  

    மன்மோகன் சிங் கடந்த 2004 முதல் 2014 ஆண்டு காலத்தில் 2 முறை தொடர்ச்சியாக பிரதமராக பதவி வகித்தார். இவர் புகழ்ப்பெற்ற பொருளாதார நிபுணரானவர். இவருக்கு இன்று 90 வயது பூர்த்தியாகிறது. 

    இந்நிலையில், இவரின் பிறந்தநாளான இன்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். 

    இது தொடர்பாக முதல்வர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில்,

    முன்னாள் பிரதமரும் புலமை மிக்க அறிஞருமான டாக்டர் மன்மோகன் சிங்கிற்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். அவர் ஆட்சியில் ஸ்திரத்தன்மையை வழங்கினார்; பொது வாழ்வில் கண்ணியத்தைப் பேணினார்; வறுமையைப் போக்கினார்; பணிவின் உருவகமாக இருந்து இதையெல்லாம் செய்தார். அவர் நல்ல ஆரோக்கியமும் மகிழ்ச்சியும் பெற வாழ்த்துக்கள்.

    இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார். 

    இதையும் படிங்க : பெட்ரோல் குண்டு வீச்சுகளால் தமிழகத்தில் பதற்றம்; அமித்ஷாவை சந்திக்கிறார் ஆளுநர் ஆர்.என்.ரவி

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....