Saturday, March 16, 2024
மேலும்
    Homeசெய்திகள்விளையாட்டுபோட்டி தொடங்க தாமதமானதால் எடுக்கப்பட்ட அதிரடி முடிவு....சாதிக்குமா இந்தியா?

    போட்டி தொடங்க தாமதமானதால் எடுக்கப்பட்ட அதிரடி முடிவு….சாதிக்குமா இந்தியா?

    தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டி 40 ஓவர்களாக குறைக்கப்பட்டுள்ளது.

    தென்னாப்பிரிக்க அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இந்த சுற்றுப்பயணத்தில் தென்னாப்பிரிக்க அணி 3 இருபது ஓவர் போட்டிகள், 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடவுள்ளது. 

    அதன்படி, இதுவரை நடைபெற்ற இரு இருபது ஓவர் போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெற்று இருபது ஓவர் தொடரைக் கைப்பற்றியது. இதைத்தொடர்ந்து தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடர் லக்னோவில் உள்ள அடல் பிஹாரி வாஜ்பாய் மைதானத்தில் இன்று நடைபெறுகிறது. 

    இதையும் படிங்க: தாமதமாகும் இந்தியா- தென்னாப்பிரிக்கா முதல் ஒருநாள் போட்டி…காரணம் என்ன?

    மதியம் 2 மணியளவில் இந்த ஒருநாள் போட்டியானது தொடங்கும் என்று எதிர்ப்பார்த்திருந்த நிலையில், லக்னோவில் காலை முதல் மழை பெய்து வருவதால் டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டது. 

    இந்நிலையில், மழைக்காரணமாக இன்றைய ஒருநாள் போட்டி 3.45 மணிக்கு தொடங்கியது. மேலும், தாமதம் காரணமாக 50 ஓவர் போட்டி 40 ஓவர் போட்டியாக குறைக்கப்பட்டுள்ளது. தற்போது இந்திய அணி டாஸ் வென்று பந்துவீச்சில் ஈடுபட்டு வருகிறது. இப்போட்டியின் மூலம் ஐபிஎல் புகழ் ரூத்ராஜ் கெய்க்வாட் சர்வதேச முதல் ஒருநாள் போட்டியில் களம் காணுகிறார். 

    மேலும், தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் விளையாடவுள்ள இந்திய அணிக்கு ஷிகர் தவான் தலைமை தாங்குகிறார். இருபது ஓவர் தொடரைக் கைப்பற்றியது போலவே ஒருநாள் தொடரையும் இந்திய அணி கைப்பற்றுமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எழுந்துள்ளது. 

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....