Sunday, April 28, 2024
மேலும்
    Homeசெய்திகள்தமிழ்நாடுவண்டல் மண்ணை விவசாயிகள் இலவசமாக அள்ள தடையா?

    வண்டல் மண்ணை விவசாயிகள் இலவசமாக அள்ள தடையா?

    கண்மாய், குளங்களில் படிந்திருக்கும் வண்டல் மண்ணை விவசாயிகள் இலவசமாக அள்ளிச் செல்ல அனுமதி வழங்குவதில் தாமதம் ஏற்படுவதாக விவசாயிகள் புகார் தெரிவிக்கின்றனர்.

    கடந்த ஏப்ரல் மாத துவக்கத்தில் கண்மாய், குளங்களில் படிந்திருக்கும் வண்டல் மண்ணை இலவசமாக எடுத்துச் செல்ல விவசாயிகளுக்கு அரசு அனுமதி வழங்கியது. இதனை தொடர்ந்து ஏப்ரல் 28ல் மாவட்ட அளவில் ஆட்சியர்கள் அறிவிப்பு வெளியிட்டனர்.

    இதில் விருப்பமுள்ள விவசாயிகள் உடனே விண்ணப்பித்து, மதுரை மாவட்டத்தில் 1236 கண்மாய்களில் வண்டல் மண்ணை துார்வாரலாம். நஞ்சை நிலம் எனில் 75 கனமீட்டர் அளவுக்கு அல்லது 25 டிராக்டர் லோடுகள் என்றும், புஞ்சை நிலம் எனில் 90 கனமீட்டர் அல்லது 30 டிராக்டர் அளவுக்கு வண்டல் மண்ணை அள்ளிச் செல்லலாம் என்றும் தெரிவித்தனர். மண் அள்ளுவதற்கான சில நிபந்தனைகளையும் அரசு வகுத்து இருந்தது.

    அவைகளாவன;
    • வண்டல் மண்ணை எடுத்துச் செல்ல கண்மாய் கரைகளை பாதையாக பயன்படுத்தி சேதப்படுத்தக் கூடாது.
    • துார்வாரிய மண்ணை கரைகளில் சேகரித்து வைக்கக் கூடாது.
    • கண்மாயில் ஒரே இடத்தில் அள்ளாமல் பரவலாக அள்ள வேண்டும்

    இதனையடுத்து விவசாயிகள் வண்டல் மண் அனுமதி கேட்டு விண்ணப்பித்து வருகின்றனர். பிற மாவட்டங்களில் அனுமதி வழங்கப்படுகிறது. ஆனால் மதுரையில் ஒன்றரை மாதங்களாக அனுமதி வழங்கப்படாததால் விவசாயிகள் ஏமாற்றமடைந்துள்ளதாக தெரிவித்தனர். மண் அள்ளும் பணியில் ஈடுபட முடியாமல் விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர்.

    மேலுார் தாசில்தார் இளமுருகனிடம் இதைப்பற்றி கேட்டபோது, ”மேலுாரில் விண்ணப்பித்தோர் மனுவை கனிமவளத்துறை மூலம் ஆட்சியர் அனுமதி பெற்று வழங்கிய பின் அனுமதி வழங்கப்படும். தற்போது மழை பெய்வதால் டிராக்டர் வயல்வெளியில் பதிந்து கொள்ளும் என்பதால் மண் அள்ள தயங்குவதாக தெரிகிறது” என்றார். விவசாயிகள் நலன் கருதியே மண் அள்ளும் பணி தற்காலிகமாக மதுரையில் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளதாக அவர் கூறினார்.

    கள்ளக் காதலனுக்காக கணவனையே வாழைக்கு உரமாக்கிய மனைவி!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....