Sunday, March 17, 2024
மேலும்
    Homeபொழுதுபோக்குசினிமா செய்திகள்நடிகர் விஜய்யின் படத்தில் ஃபஹத் பாசில்? - அவரே சொன்ன பதில்

    நடிகர் விஜய்யின் படத்தில் ஃபஹத் பாசில்? – அவரே சொன்ன பதில்

    ‘விஜய் 67’ திரைப்படம் லோகேஷ் யுனிவர்ஸ் கீழ் வந்தது என்றால் நான் நடிக்க வாய்ப்புள்ளதாக நடிகர் ஃபஹத் ஃபாசில் தெரிவித்துள்ளார். 

    நடிகர் விஜய்யின் நடிப்பில் கடந்த ஜனவரி 11-ஆம் தேதி வெளிவந்த வாரிசு திரைப்படம், கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் வசூலில் மாபெரும் வேட்டை நடத்தி வருகிறது.

    மாஸ்டர் திரைப்படத்தின் வெற்றிக்குப் பிறகு தளபதி விஜய் மற்றும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இருவரும் விஜய்யின் 67-ஆவது திரைப்படத்தில் இணையவுள்ளதாக தகவல்கள் தொடர்ந்து வெளிவந்த வண்ணமே உள்ளது. உறுதியும் ஆகி விட்டது. 

    விஜய்யின் 67-ஆவது திரைப்படத்தில் நடிக்க உள்ள நடிகர்கள் குறித்து பேசுகையில், நடிகர் அர்ஜூன், கௌதம் வாசுதேவ் மேனன், மன்சூர் அலிகான், சஞ்சய் தத், மிஷ்கின், ஜனனி போன்றோர் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. 

    இந்நிலையில், மலையாளத்தில் வெளியாக உள்ள ‘தங்கம்’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு கலந்துகொண்ட ஃபஹத் ஃபாசிலிடம், ‘நீங்கள் விஜய் 67 படத்தில் நடிக்க வாய்ப்புள்ளதா?’ என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர், ‘விஜய் 67’ திரைப்படம் லோகேஷ் யுனிவர்ஸ் கீழ் வந்தது என்றால் நான் நடிக்க வாய்ப்புள்ளது’ எனத் தெரிவித்துள்ளார்.

    லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளிவந்த விக்ரம் திரைப்படத்தில் ஃபஹத் ஃபாசில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

    வெறும் வாயில் வடை சுடும் அண்ணாமலை! போட்டிக்கு அழைக்கும் மாணிக்கம் தாகூர்

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....