Tuesday, May 7, 2024
மேலும்
    Homeசெய்திகள்அரசியல்முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கோவை தங்கம் மறைவு; தலைவர்கள் இரங்கல்

    முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கோவை தங்கம் மறைவு; தலைவர்கள் இரங்கல்

    முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கோவை தங்கம் உடல்நலக் குறைவு காரணமாக இன்று காலமானார். 

    கோவை தங்கம் கடந்த 2001 ஆம் ஆண்டு முதல் 2011 ஆம் ஆண்டு வரை வால்பாறை தொகுதியில் காங்கிரஸ் சார்பில் 2 முறை எம்.எல்.ஏ.வாக இருந்தார். பிறகு, அவர் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி, கடந்த 2021ஆம் ஆண்டில் திமுகவில் இணைந்தார்.

    கோவை தங்கம் உடல் நலக்குறைவால் கோவை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று காலமானார். அவருக்கு வயது 74. கோவை தங்கத்தின் உடல் சாய்பாபா காலனி பகுதியில் உள்ள அவரது இல்லத்தில் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. 

    இதையும் படிங்க: குண்டடி பட்டும் பயங்கரவாதிகளுடன் போராடிய நாய்..! இதுவல்லவா விசுவாசம்..!

    இறுதிச் சடங்குகள் இன்று மாலை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இவரின் மறைவுக்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் “வால்பாறை சட்டமன்றத் தொகுதி முன்னாள் உறுப்பினர் கோவை தங்கம் உயிரிழந்தார் என்ற செய்தி அறிந்து அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன். மாற்றுக் கட்சியில் இருந்தபோதும், திமுகவில் இணைந்த பின்பும் என் மீது மிகுந்த அன்பு கொண்டிருந்தவர் கோவை தங்கம். அவரை இழந்து தவிக்கும் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துக்கொள்கிறேன்” என தெரிவித்துள்ளார்.

    மேலும், பல அரசியல் கட்சித் தலைவர்கள் கோவை தங்கம் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.  

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....