Monday, April 29, 2024
மேலும்
    Homeசெய்திகள்தமிழ்நாடுஇந்தியாவின் சுதந்திர போராட்ட வரலாறு முறையாக பதிவு செய்யப்படவில்லை- தமிழ்நாடு ஆளுநர்

    இந்தியாவின் சுதந்திர போராட்ட வரலாறு முறையாக பதிவு செய்யப்படவில்லை- தமிழ்நாடு ஆளுநர்

    நாட்டின் ஒவ்வொரு கிராமத்திலும் ஒரு விடுதலை போராட்ட வீரர் இருப்பதாக தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார். 

    சென்னை, கிண்டி ஆளுநர் மாளிகையில் இன்று நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. இதில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்துகொண்டார். 

    அப்போது அவர் நிகழ்ச்சியில் பேசும்போது, சுதந்திரத்திற்காக போரிட்டவர்க்ளை நாம் எவ்வாறு ஒதுக்கி வைக்க முடியும் என்ற கேள்வியோடு தொடங்கினார். மேலும் அவர்களை எவ்வாறு மறக்க முடியும் என்றும் கேட்டார். 

    தொடர்ந்து பேசிய ஆளுநர், சுதந்திரம் கிடைத்த பிறகும் நமது நாட்டில் ராணுவத்தை ஒதுக்கி வைத்ததாகவும், இருப்பினும் பிரதமர் 21 பரம் வீர் சக்ரா விருது பெற்ற வீரர்களின் பெயர்களை அந்தமான் நிக்கோபார் தீவுகளுக்கு பெயர் சூட்டியிருக்கிறார் என்றும் கூறினார். 

    தான் தமிழ்நாட்டுக்கு வந்தவுடன் சுதந்திரத்திற்காக போராடிய, தமிழ்நாட்டைச் சேந்தவர்களின் எண்ணிக்கை மற்றும் அவர்கள் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என்று கேட்டதாகவும், அவரிடம் 200 நபர்கள் பற்றி கூறியதாகவும் தெரிவித்தார். 

    இதைத்தொடர்ந்து பேசிய ஆளுநர், அவர்கள் அனைவரும் தலைவர்கள் என்றும் அதை விட களத்தில் நின்று போராடிய நிறைய சுதந்திர போராட்ட வீரர்கள் தமிழ்நாட்டில் இருப்பதாகவும் கூறினார்.

    நாட்டில் ஒவ்வொரு கிராமத்திலும் ஒரு விடுதலை போராட்ட வீரர் உள்ளார். தமிழ்நாட்டில் இருந்து அதிகளவில் சுதந்திர போராட்டத்தில் பங்கெடுத்து இருக்கின்றனர் என ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்தார். 

    அதோடு, நாட்டில் சுதந்திரத்திற்காக போராடிய எந்த ஒரு வீரர்களையும் மறந்து விட முடியாது என்று கூறிய ஆளுநர், எளிதாக சுதந்திரம் கிடைத்து விட வில்லை என்றும் ஒரு குறிப்பிட்ட கட்சியை சேர்ந்தவர்கள் மட்டுமே சுதந்திர போராட்ட வரலாற்றில் பதிவு செய்யப்பட்டு இருப்பதாகவும் தெரிவித்தார். 

    மேலும், இந்தியாவின் சுதந்திர போராட்ட வரலாறு முறையாக பதிவு செய்யப்படவில்லை. இதனால் சுதந்திர போராட்ட வரலாறு மாற்றி எழுதப்பட வேண்டும் என ஆளுநர் ஆர்.என்.ரவி குறிப்பிட்டார். 

    வெளி மாநிலங்களில் தஞ்சம் புகுந்துள்ள ரவுடிகளை கைது செய்ய டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவு

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....