Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்அரசியல்வாக்கு எண்ணிக்கை மையத்தில் இருந்து வெளியேறிய அதிமுக வேட்பாளர் தென்னரசு

    வாக்கு எண்ணிக்கை மையத்தில் இருந்து வெளியேறிய அதிமுக வேட்பாளர் தென்னரசு

    ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை மையத்தில் இருந்து அதிமுக வேட்பாளர் தென்னரசு வெளியேறினார். 

    ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் கடந்த 27 ஆம் தேதி நடைபெற்றது. இந்நிலையில், இதற்கான வாக்கு எண்ணிக்கை சித்தோடு ஐ.ஆர்.டி.டி கல்லூரியில் இன்று நடைபெற்று வருகிறது. 

    வாக்கு எண்ணிக்கையில் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் ஆரம்பம் முதலே தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறார். தொடர்ந்து 4-வது சுற்றிலும் காங்கிரஸ் கட்சி முன்னிலை வகித்து வருகிறது. அதிமுக வேட்பாளர் தென்னரசுவை விட இளங்கோவன் 21 ஆயிரம் வாக்குகள் முன்நிலை வகிக்கிறார். 

    இந்நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை மையத்தில் இருந்து அதிமுக வேட்பாளர் தென்னரசு வெளியேறினார். தென்னரசு வெளியேறுகையில் செல்லும் போது செய்தியாளர்கள் சந்திப்பில், “ஜனநாயகத்திற்கு மதிப்பில்லை, பணநாயகம் வென்று விட்டது” என்று கூறினார்.

    ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் முதல் சுற்று முடிவில் தேமுதிக வேட்பாளர் ஆனந்த் 112 வாக்குகளை பெற்றிருந்த நிலையில், சுயேட்சை வேட்பாளர் முத்துபாலா 176 வாக்குகளை பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

    ஷாருக்கான் படத்தை தவிர்த்தாரா அல்லு அர்ஜூன்? – வெளிவந்த தகவல்..

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....