Wednesday, May 1, 2024
மேலும்
    Homeசெய்திகள்விளையாட்டுஇங்கிலாந்துக்கு எதிரான இரண்டாம் நாள் ஆட்டம்; சதமடிப்பாரா ஜடஜா?

    இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாம் நாள் ஆட்டம்; சதமடிப்பாரா ஜடஜா?

    இங்கிலாந்துக்கு எதிரான 5-வது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்ட நேர முடிவில், இந்திய அணி 7 விக்கெட் இழப்புக்கு  338 ரன்கள் எடுத்தது. 

    இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி ஒரு டெஸ்ட் போட்டி, ஒரு நாள் தொடர், இருபது ஓவர் தொடர் ஆகியவற்றில் விளையாட உள்ளது. 

    இந்நிலையில், இங்கிலாந்தில் உள்ள பிரமிங்காம் நகரில் டெஸ்ட் போட்டி நேற்றுத் தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி, முதலில் இந்தியாவை பேட்டிங் செய்ய பணித்தது. அதன்படி, இந்திய அணி சார்பில் சுப்மன் கில் மற்றும் சத்தீஸ்வர் புஜாரா தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர்.

    சுப்மன் கில் 17 ரன்களிலும், சத்தீஸ்வர் புஜாரா 13 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இதற்கு அடுத்து வந்த விஹாரி 20 ரன்களில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார். 

    பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட விராட் கோலி இம்முறையும் ரசிகர்களை ஏமாற்றினார். ஆம், மேட்டி பாட்ஸ் பந்துவீச்சில் 11 ரன்கள் எடுத்திருந்த நிலையில் விராட் கோலி போல்ட் ஆகி ஆட்டமிழந்தார். 

    அடுத்தடுத்த விக்கெட் இழப்புகளால், இந்திய அணி சரிவில் இருந்தது. தடுமாற்றத்தில் இருந்த இந்திய அணியை ரிஷப் பண்ட் மீட்டெடுத்தார். மிகவும் அதிரடியாக விளையாடி ரிஷப் பண்ட் 89 பந்துகளில் சதமடித்தார். இவருக்கு பக்க பலமாக ரவீந்திர ஜடேஜா தனது ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

    ரிஷப் பண்ட் மற்றும் ரவீந்திர ஜடேஜா ஜோடியானது நிதானத்தையும் விவேகத்தையும் ஒன்று சேர்த்து விளையாடி இந்திய அணியை சரிவில் இருந்து மீட்டெடுத்தது. முதல்  நாள் ஆட்ட முடிவில், இந்திய அணி 7 விக்கெட் இழப்புக்கு  338 ரன்கள் எடுத்தது. 

    ரிஷப் பண்ட் 146 ரன்கள் எடுத்திருந்த நிலையில், ரூட் வீசிய பந்தில் தனது விக்கெட்டை பறிகொடுத்தார். களத்தில் ரவீந்திர ஜடேஜா மற்றும் முகமது ஷமி உள்ளனர். 

    தற்காலிக ஆசிரியர்களை நியமிக்க இடைக்காலத் தடை: மதுரைக்கிளை

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....