Saturday, April 27, 2024
மேலும்
    Homeசெய்திகள்இந்தியாவிவோ நிறுவனத்தில் அமலாக்கத்துறையினர் சோதனை

    விவோ நிறுவனத்தில் அமலாக்கத்துறையினர் சோதனை

    விவோ (vivo) நிறுவனத்துடன் தொடர்புடைய 44 இடங்களில் அமலாக்கத்துறையினர் இன்று சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    சீனாவை சேர்ந்த கைப்பேசி நிறுவனமான விவோ மீது பண மோசடி தடுப்புச் சட்ட வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில், இந்தியா முழுவதும் விவோ நிறுவனத்துடன் தொடர்புடைய 44 இடங்களில் இன்று அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகிறது. 

    இச்சோதனையானது உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம், பிகார் உள்ளிட்ட தென்னிந்திய மாநிலங்களில் நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.  

    மேலும், சீனாவை சேர்ந்த கைப்பேசி நிறுவனங்களான விவோ, ஷியோமி, ஓப்போ உள்ளிட்ட நிறுவனங்களுடன் தொடர்புடைய 20 இடங்களில் கடந்த டிசம்பர் மாதம் வருமான வரித் துறை சோதனை நடத்தியது. வரி ஏய்ப்பு புகாரின் அடிப்படையில் இச்சோதனை நடைபெற்றது.

    இதுமட்டும் அல்லாது, கடந்த ஏப்ரல் மாதம், ஷியோமி நிறுவனத்திடம் சட்டவிரோத பரிவர்த்தனைகள் தொடர்பாக 5,551.27 கோடி ரூபாயை அமலாக்கத்துறை கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.

    செவ்வாய் கிரகத்தில் ஆறு: புகைப்படத்தை வெளியிட்டது நாசா

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....