Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்விளையாட்டுசொத்து இழந்ததில் கின்னஸ் சாதனை படைத்த எலான் மஸ்க்கின் அடுத்த திட்டம்?

    சொத்து இழந்ததில் கின்னஸ் சாதனை படைத்த எலான் மஸ்க்கின் அடுத்த திட்டம்?

    ட்விட்டரின் வருவாயை பெருக்கும் வகையில் எலான் மஸ்க் புதிய திட்டம் ஒன்றை அமல்படுத்த உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. 

    எலான் மஸ்க் ட்விட்டரை கைப்பற்றியதில் இருந்து பல்வேறு சம்பவங்கள் ட்விட்டரில் நிகழ்ந்து வருகின்றன. அவரின் செயல்கள் ட்விட்டர் பயனர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தும் வண்ணமே உள்ளது. குறிப்பாக, ப்ளூ டிக், ஊழியர்கள் பணி நீக்கம் போன்றவை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தின. 

    இதைத்தொடரந்து, எலான் மஸ்க்கின் சொத்து மதிப்பு என்பது கடந்த சில மாதங்களாக அதீத சரிவைச் சந்தித்து வருகிறது. உலகளவில் பணக்காரர்கள் பட்டியலில் முதலிடத்தில் இருந்த எலான் மஸ்க் ஆறாவது இடத்திற்கு தள்ளப்பட்டார். 

    இவரின் சொத்து மத்திப்பு குறைவு விகிதமானது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. இதன் விளைவாக அதிக சொத்துகளை விரைவாக இழந்த பணக்காரர் என்ற கின்னஸ் சாதனையை எலான் மஸ்க் புரிந்தார். 

    இந்நிலையில், ட்விட்டரின் வருவாயை பெருக்கும் வகையில் எலான் மஸ்க் புதிய திட்டம் ஒன்றை அமல்படுத்த உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. அதன்படி, ட்விட்டரில் பயனர் பெயர்களை விற்பனை செய்ய ட்விட்டர் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. அதாவது, ட்விட்டரில் @ என்ற எழுத்துருவுக்கு அடுத்து வரும் பெயர்களை பயனர்கள் பெற கட்டணம் செலுத்த வேண்டும். 

    ஆனால், இம்முடிவு எப்போது அமலுக்கு வரும் என்ற தகவல்கள் எதுவும் இதுவரை வெளியிடப்படவில்லை. 

    ஹாக்கி உலகக் கோப்பை; இந்தியா யாருடன் மோதப்போகிறது?

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....