Monday, April 29, 2024
மேலும்
    Homeசெய்திகள்உலகம்ட்விட்டர் பக்கத்தில் எலான் மஸ்க் செய்த செயல்; பேசுபொருளாய் மாறிய பெயர்!

    ட்விட்டர் பக்கத்தில் எலான் மஸ்க் செய்த செயல்; பேசுபொருளாய் மாறிய பெயர்!

    பிரபல சமூகவலைதளமான ட்விட்டர் பக்கத்தில் தனது பெயரை ‘மிஸ்டர் ட்வீட்’ என எலான் மஸ்க் மாற்றியுள்ளார். 

    ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் எலான் மஸ்க், பிரபல சமூகவலைதளமான ட்விட்டரை சமீபத்தில் வாங்கினார். இதன்மூலம், ட்விட்டரின் தலைமைச் செயல் அதிகாரியாக எலான் மஸ்க் உள்ளார். 

    இதைத்தொடர்ந்து, எலான் மஸ்க் தொடர்ந்து பல்வேறு நிகழ்வுகளை ட்விட்டர் நிறுனத்திலும், தளத்திலும் நிகழ்த்தி வருகிறார். அவற்றில் பல சர்ச்சைக்குள்ளாகி வருகிறது. குறிப்பாக, ஆட்குறைப்பும், ப்ளுடிக் சமந்தமான அறிவிப்புகளும் பெரிய அளவில் சர்ச்சைகளை சந்தித்தன. 

    இந்நிலையில், அவ்வபோது ட்விட்டரில் தன் பெயரை மாற்றும் வழக்கமுடைய எலான் மஸ்க் தன் ட்விட்டர் பக்கத்தில் தனது பெயரை ‘மிஸ்டர் ட்வீட்’ என மாற்றியுள்ளார். 

    மேலும், தன் ட்விட்டர் பதிவில் இனி தானே நினைத்தாலும் அந்தப் பெயரை மாற்ற முடியாது என எலான் மஸ்க் தெரிவித்துள்ளார். இவரின் இந்த செயல் தற்போது ட்விட்டர் மட்டுமல்லாமல் பிற சமூகவலைதளங்களிலும் வைரலாகி வருகிறது.

     மகேந்திர சிங் தோனி தயாரித்துள்ள முதல் படம்; வெளியான மோஷன் போஸ்டர்!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....