Tuesday, May 7, 2024
மேலும்
    Homeசெய்திகள்அரசியல்வருகிறது மின் கட்டண உயர்வு.. அமைச்சர் செந்தில்பாலாஜி அதிரடி தகவல்

    வருகிறது மின் கட்டண உயர்வு.. அமைச்சர் செந்தில்பாலாஜி அதிரடி தகவல்

    தமிழகத்தில் திருத்தி அமைக்கப்பட்ட புதிய மின் கட்டண உயர்வு அடுத்த மாதம் அமல்படுத்தப்பட உள்ளதாக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி இன்று அறிவித்துள்ளார்.

    தமிழகத்தில் மின் கட்டணத்தை உயர்த்த தமிழ்நாடு மின்சார வாரியம் முடிவு செய்து அதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில், அதிமுக உள்ளிட்ட கட்சிகள் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து வந்தன. இருந்தும் மின்கட்டணத்தை உயர்த்தினால் மட்டுமே ரூ.1.75 லட்சம் கோடி கடனில் தத்தளித்து கொண்டிருக்கும் மின் வாரிய துறையை அதிலிருந்து மீட்டெடுக்க முடியும் என்பதன் அடிப்படையில் மின்சார ஒழுங்குமுறை ஆணையம் சார்பில் சென்னையில் கருத்துக்கேட்புக் கூட்டங்களும் நடத்தப்பட்டது.

    எனினும், கருத்துக்கேட்புக் கூட்டங்களில் மின் கட்டண உயர்வுக்கு பொதுமக்களும், சிறு, குறு தொழில் நிறுவனத்தினரும் எதிர்ப்புத் தெரிவித்தனர். இந்நிலையில், அடுத்த மாதம் மின் கட்டண உயர்வு அமலுக்கு வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    இது குறித்து சென்னை தலைமைச் செயலகத்தில் மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது:

    மின் கட்டண உயர்வுக்கு, மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் ஒப்புதல் விரைவில் கிடைக்க உள்ளதால் திருத்திய மின் கட்டண உயர்வு அடுத்த மாதம் முதல் நடைமுறைக்கு வர வாய்ப்புள்ளது.

    அதேபோல் தமிழ்நாடு முழுவதும் உள்ள மாநகராட்சி மற்றும் நகராட்சி, மின் வாரிய அலுவலகங்கள் உள்ளிட்ட அரசு இடங்களில் மின்சார வாகனங்களுக்கு சார்ஜ் செய்யும் வசதி கொண்ட சார்ஜிங் பாயிண்ட் அமைப்பதற்கு இடங்கள் தேர்வு செய்யப்பட்டு வருவதால் முதற்கட்டமாக 100 இடங்களில் பார்க்கிங் உள்ளிட்ட நவீன வசதியுடன் அமைப்பதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. இதற்கு பொதுமக்கள் மத்தியில் இருக்கும் வரவேற்பைப் பொறுத்தே அடுத்த கட்டமாக இப்பணிகள் மற்ற இடங்களுக்கும் விரிவுபடுத்தப்படும்.

    வடகிழக்கு பருவமழையின் போது ஏற்படும் பேரிடர்களை எதிர்கொள்ள ஒரு லட்சத்து 45 மின் கம்பங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கும் திட்டத்தில் ஏற்கனவே ஒரு லட்சம் விவசாயிகளுக்கு இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளது. இரண்டாம் கட்டமாக 50 ஆயிரம் இலவச விவசாய மின் இணைப்புகள் 100 நாட்களில் வழங்குவதற்கான பணிகளும் நடைபெற்று வருகிறது. இம்மாத இறுதிக்குள் அப்பணிகளும் விரைந்து முடிக்கப்பட்டு முதலமைச்சர் அதனை தொடங்கி வைப்பார்.

    அதேபோல், விழும் நிலையில் உள்ள வலுவற்ற மின்கம்பங்களும் மாற்றப்பட்டு வருகின்றன. இதில் 80 சதவீத பணிகள் முடிக்கப்பட்டுவிட்டன. பருவமழை தொடங்குவதற்கு முன் அனைத்துப் பணிகளும் முடிக்கப்பட்டு விடும்.

    மின்வாரிய அதிகாரிகள் மீது தொடர்ந்து புகார்கள் வரும் நிலையில், அதிகாரிகள் தவறு செய்யாமல் கண்காணிக்க மின் வாரியத்தில் உள்ள 12 மண்டலங்களுக்கும் தலா மூன்று பேர் கொண்ட சிறப்பு குழு அமைக்கப்பட உள்ளது. மொத்தம் 36 நபர்கள் இந்த கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள்.

    இவ்வாறு அமைச்சர் தெரிவித்துள்ளார் .

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....