Saturday, March 16, 2024
மேலும்
    Homeசெய்திகள்அரசியல்'நானே மக்களை திரட்டி போராட்டத்தில் ஈடுபடுவேன்' - அன்புமணி ராமதாஸ் பேச்சு!

    ‘நானே மக்களை திரட்டி போராட்டத்தில் ஈடுபடுவேன்’ – அன்புமணி ராமதாஸ் பேச்சு!

    கும்பகோணத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். 

    இக்கூட்டத்தில் பேசிய அவர், திமுக ஆட்சிக்கு வந்த உடன், நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என பலமுறை கூறியதாகவும், ஆனால் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என தெரிவித்தார். 

    மேலும், இன்றைய மாணவர்கள் மென்மையானவர்கள் என கூறிய அவர், பெற்றோர்கள் அவர்களை மருத்துவம் படிக்க வேண்டுமென அழுத்தம் கொடுக்கக்கூடாது என கேட்டுக் கொண்டார்.

    பொதுக்கூட்டத்திற்கு பிறகு பத்திரிகையாளர்களை சந்தித்த அன்புமணி ராமதாஸ் கும்பகோணம் தனி மாவட்டமாக அறிவிக்கப்பட வேண்டும். இதற்கு தமிழக அரசு ஆவணம் செய்ய வேண்டும். அப்படியில்லை என்றால் நானே மக்களை திரட்டி போராட்டத்தில் ஈடுபடுவேன் என்று தெரிவித்தார். மேலும், சிறிய மாவட்டங்கள்தான் நிர்வாகத்துக்கு ஏதுவாக இருக்கும் என்று தெரிவித்தார்.

    இதுமட்டுமல்லாது, மீத்தேன், நீர் மேலாண்மை, வறட்சி, கல்விக்கொள்கை போன்றவற்றை குறித்தும் அன்புமணி ராமதாஸ் பத்திரிக்கையாளர்களிடம் பேசினார். 

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....