Saturday, May 4, 2024
மேலும்
    Homeசெய்திகள்இந்தியாதேர்தல் பொறுப்பு அலுவலராக நியமிக்கப்பட்ட ஐஏஎஸ் அதிகாரி திடீர் பணி நீக்கம்: அதிரடி காட்டிய தேர்தல்...

    தேர்தல் பொறுப்பு அலுவலராக நியமிக்கப்பட்ட ஐஏஎஸ் அதிகாரி திடீர் பணி நீக்கம்: அதிரடி காட்டிய தேர்தல் ஆணையம்

    தனக்கு வழங்கப்பட்ட தேர்தல் பணிக்கான வாகனத்துடன் புகைப்படம் எடுத்து, இன்ஸ்ட்டாகிராமில் பதிவிட்ட, ஐஏஎஸ் அதிகாரியின் மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது. 

    குஜராத் சட்டமன்ற தேர்தல் வருகிற டிசம்பர் 1 மற்றும் 5 ஆகிய இரண்டு தேதிகளில் இரு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் கடந்த 3 ஆம் தேதி அறிவிப்பை வெளியிட்டது. மேலும், வாக்கு எண்ணிக்கையும் தேர்தல் முடிவுகளும் டிசம்பர் 8 ஆம் தேதியே  வெளியிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    இந்நிலையில், அங்கு தேர்தல் விதிமுறைகள் அமலுக்கு வந்தது. மேலும் அங்கு தேர்தல் பொறுப்பு அலுவலர்களை தேர்தல் ஆணையம் நியமித்து வருகிறது. இதன்படி, அகமதாபாத்தில் உள்ள பாபுன்நகர், அஸ்வாரா ஆகிய இரு தொகுதிகளுக்கு தேர்தல் பொறுப்பு அலுவலராக ஐஏஎஸ் அதிகாரி அபிஷேக் சிங் நியமிக்கப்பட்டார். 

    அபிஷேக் சிங் தனது சமூக வலைதள பக்கங்களில் ஆக்டிவாக செயல்படுவர். இந்நிலையில் தேர்தல் அலுவல் பணிகளுக்காக கொடுக்கப்பட்ட வாகனத்துடன் நின்று புகைப்படம் எடுத்துள்ளார். மேலும் தேர்தல் பாதுகாவலர்களுடன் சேர்ந்தும் புகைப்படம் எடுத்து அவற்றை தனது இன்ஸ்ட்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 

    இதையடுத்து, இந்த பதிவு தேர்தல் அதிகாரிகளின் கவனத்திற்கு செல்ல, பிரபலமடைவதற்காக அரசு பொறுப்பை பயன்படுத்தியதாக புகார் கூறி, தேர்தல் பொறுப்பு அலுவலர் பதவியில் இருந்து அபிஷேக் சிங் நீக்கப்பட்டார்.  மேலும், அடுத்த உத்தரவு வரும் வரை தேர்தல் பணியில் ஈடுப்படக்கூடாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    இதுகுறித்து தனது ட்விட்டர் பதிவில் அபிஷேக் சிங், ‘அந்த பதிவில் எந்த தவறும் இருப்பதாக தெரியவில்லை. ஆனாலும் பொதுமக்களின் ஊழியராக மக்களிடம் தொடர்பு கொள்ளும் நோக்கத்தில் மட்டுமே பதிவிட்டேன். இதில் பப்பிளிசிட்டி இஸ்டன்ட் எதுவும் இல்லை. இருப்பினும் தேர்தல் ஆணையத்தின் முடிவை பணிவுடன் ஏற்கிறேன் என்று தெரிவித்துள்ளார். 

    குஜராத்தில் 2 கட்டங்களாக நடைபெறும் சட்டமன்றத் தேர்தல்

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....