Monday, May 6, 2024
மேலும்
    Homeசெய்திகள்உலகம்பொருளாதார வீழ்ச்சியால் தடுமாறும் இலங்கை; வீட்டிலிருந்தே பணி செய்ய ஊழியர்களுக்கு அரசு உத்தரவு.

    பொருளாதார வீழ்ச்சியால் தடுமாறும் இலங்கை; வீட்டிலிருந்தே பணி செய்ய ஊழியர்களுக்கு அரசு உத்தரவு.

    இலங்கையில் நிலவி வரும் கடுமையான பொருளாதாரச் சரிவின் காரணமாக அத்தியாவசியப் பொருட்கள் உட்பட அனைத்தும் விண்ணைத் தொடும் அளவு விலை உயர்ந்துள்ளது. பெட்ரோல் டீசல் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. அரசுத் துறைகளில் வேலை செய்யும் ஊழியர்களை வீட்டிலிருந்தே வேலை செய்யமாறு இலங்கை அரசு கேட்டுக்கொண்டுள்ளது.

    22 மில்லியன் மக்கள்தொகை கொண்ட இலங்கையின் அந்நியச் செலாவணி மதிப்பு 70 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு குறைந்துள்ளது. இதனால் நாட்டிற்குத் தேவையான உணவு, மருந்து பொருட்கள், எரிபொருட்கள் வாங்குவதில் கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

    பெட்ரோல், டீசல் வாங்குவதற்காக பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கும் நிலைமையும் ஏற்பட்டுள்ளது. 

    ‘நான்கு நாட்களாக வரிசையில் காத்திருக்கிறேன், இன்னும் எனக்கு சரியான தூக்கமில்லை, சரியாக உணவும் உட்கொள்ளவில்லை. சம்பாதிப்பதற்கு வழி இல்லை, எங்களது குடும்பங்கள் பசியால் வாடிக்கொண்டிருக்கின்றன.’ என்று பெட்ரோலுக்காக வரிசையில் காத்திருக்கும் ஆட்டோ ஓட்டுநரான ஷெல்டன் என்பவர் கூறியுள்ளார். அவருக்கு 67 வயதாகிறது.

    இலங்கையின் கையிருப்பில் இருக்கும் பெட்ரோல், டீசலானது இன்னும் எவ்வளவு காலத்திற்கு நீடிக்கும் என்பது தெரியாத நிலையில் உள்ளது. 9000 டன் பெட்ரோலும், 6000 டன் டீசலும் இலங்கையின் கையிருப்பில் உள்ளது. எனினும், புதிதாக இறக்குமதி ஏதும் நடைபெறவில்லை.

    எனவே, பெட்ரோல் உபயோகத்தினைக் குறைக்க அந்நாட்டு அரசானது தனது ஊழியர்களை வீட்டிலிருந்தே வேலை செய்ய அறிவுறுத்தியுள்ளது. தலைநகரம் கொழும்பு மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் பள்ளிகளுக்கு ஒரு வாரம் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஜூலை 10ம் தேதி வரை அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே பெட்ரோல் கொடுக்கப்படும் என்கிற நிபந்தனையினையும் அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.

    சர்வதேச நிதி வழங்கும் மையத்திலிருந்து ஒரு குழுவானது இலங்கைக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளது. மூன்று பில்லியன் டாலர் கடனுதவி வழங்கும் பொருட்டு அந்நாட்டு நிலவரங்களை நேரில் காண அந்தக் குழுவானது இலங்கை செல்கிறது.

    இருப்பினும் விரைவில் எந்த ஒரு நிதியும் இலங்கைக்கு சர்வதேச நிதி வழங்கும் மையத்திலிருந்து கிடைக்காது என்பது குறிப்பிடத்தக்கது.

    பருவ நிலை மாற்றத்தினால் அழிவினை நோக்கிச் சென்று கொண்டிருக்கும் கடற்பஞ்சுகள்..

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....