Sunday, March 17, 2024
மேலும்
    Homeபொழுதுபோக்குசினிமா செய்திகள்வங்கதேசத்தில் நிலநடுக்கம்; அதிர்ச்சியில் மக்கள்..இந்திய அணியின் நிலை என்ன?

    வங்கதேசத்தில் நிலநடுக்கம்; அதிர்ச்சியில் மக்கள்..இந்திய அணியின் நிலை என்ன?

    வங்கதேசத்தில் உள்ள டாக்காவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு நிலநடுக்க ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    வங்கக்கடலில் இன்று காலை 8.32 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.2 ஆக பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கம் கடல் மட்டத்தில் இருந்து 10 கிலோமீட்டர் ஆழத்தில் உணரப்பட்டதாக நில அதிர்வுக்கான தேசிய மையம் தெரிவித்துள்ளது. 

    இந்தியாவின் அண்டை நாடான வங்கதேசத்தின் டாக்காவில் உள்ள அகர்கான் நில அதிர்வு மையத்திலிருந்து 520 கி.மீ தொலைவில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் குறித்த எந்த தகவலும் இதுவரை வெளியாகவில்லை. மேலும், இந்திய கிரிக்கெட் அணியானது வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. முதல் ஒருநாள் போட்டி நிலநடுக்கம் ஏற்பட்ட டக்காவில் நடைபெற்ற நிலையில் இரண்டாம் ஒருநாள் போட்டியும் நாளை டக்காவில் நடைபெறவுள்ளது.

    இந்நிலையில், இந்திய அணி வீரர்களுக்கு எவ்வாறான தகவல்கள் கொண்டுபோய் சேர்க்கப்பட்டுள்ளது என்பது குறித்த தகவல்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை. 

    துணிவு திரைப்பட அப்டேட்… புகைப்படங்களை கண்டு வியக்கும் ரசிகர்கள்

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....