Wednesday, May 8, 2024
மேலும்
    Homeசெய்திகள்தமிழ்நாடுஇனி டிராபிக் இல்லாமல் ''உடல் உறுப்பு தானம்'' - மருத்துவமனை புதிய முயற்சி

    இனி டிராபிக் இல்லாமல் ”உடல் உறுப்பு தானம்” – மருத்துவமனை புதிய முயற்சி

    சென்னையைச் சேர்ந்த தனியார் மருத்துவமனை ஒன்று புதிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, 400 கி.மீ வரைக்கும் உடல் உறுப்புகளைக் டிரோன் மூலம் கொண்டு செல்லும் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது .

    உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் தற்போது தமிழகம் முன்னிலை வகித்து வருகிறது. இருந்தும் மூளைச்சாவு அடைந்தவர்களிடம் இருந்து உடல் உறுப்புகளைத் தானம் பெற்று, அதை உரிய நேரத்தில் கொண்டு சென்று பிறருக்கு பொறுத்துவதில் நிறைய சிக்கல்களும், பிரச்சனைகளும் அவ்வப்போது எழுந்த வண்ணம் உள்ளன. இதனை கருத்தில் கொண்டு, உடல் உறுப்புகளை தானம் பெறுவோருக்குப் காலதாமதத்தை ஏற்படுத்தாமல், சரியான நேரத்தில் கொண்டு சென்று பொறுத்துவதற்காக சென்னையைச் சேர்ந்த தனியார் மருத்துவமனை ஒரு புதிய தொழில்நுட்பத்தைப் கொண்டு வந்துள்ளது.

    அதுதான் டிரோன் மூலம் உடல் உறுப்புகளைக் எடுத்துச் செல்லும் வசதி. சென்னை எம்.ஜி.எம் ஹெல்த் கேர் மருத்துவமனையில் கடந்த சனிக்கிழமை (செப்டம்பர் -3) இந்த வசதி அறிமுகப்படுத்தப்பட்டது. மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி வீடியோ கான்ஃபிரென்சிங் மூலமும் , தமிழக அரசு சார்பில் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா சுப்ரமணியன் நேரிலும் கலந்துகொண்டு இந்த வசதியைத் தொடங்கி வைத்தனர்.

    அப்போது வீடியோ கான்ஃபிரென்சிங் மூலமாக பேசிய மத்திய அமைச்சர் நிதின் கட்கரி அவர்கள் புரட்சிகரமான இந்தத் திட்டம் வெற்றி பெற்றால் இந்தியாவில் இது ஒரு மைல்கல் என்று கூறினார். இந்தப் புதிய தொழில்நுட்பம் குறித்து மருத்துவமனையின் இதயம் மற்றும் நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சைத் துறை இயக்குநர் மருத்துவர் கே.ஆர் பாலகிருஷ்ணன் கூறுகையில், இதயம், நுரையீரல் உள்ளிட்ட உடல் உறுப்புகளை தானம் பெற்ற 4 மணி நேரத்துக்குள், நோயாளிக்குப் பொருத்தியாக வேண்டும். எல்லா நேரங்களிலும் விமானப் போக்குவரத்து கிடைக்காது. அதுபோன்ற நேரங்களில் சாலை வழியாக ஆன்புலன்ஸில் கொண்டு வரும்போது போக்குவரத்து மிகப்பெரிய பிரச்சனையாக இருக்கிறது.

    அதுபோன்ற நேரங்களில் எல்லாம் சென்னையில் ‘க்ரீன் காரிடார்’ எனப்படும் முறையைப் பயன்படுத்திப் போக்குவரத்து நிறுத்தம் செய்யப்பட்டு தங்கு தடையின்றி உடல் உறுப்பைக் கொண்டு செல்வதற்கு வழிவகை செய்யப்படுகிறது. ஆனால் பிற மாவட்டங்களிலிருந்து கொண்டு வருவதற்கு இதுபோன்ற வசதிகள் இல்லாததால் டிரோன் மூலம் கொண்டு வரும் வசதியை அறிமுகப்படுத்தியிருக்கிறோம். தற்போது சோதனை முயற்சியாக சென்னைக்கு 10 கி.மீ தூரத்திலிருந்து கொண்டு வருவதற்கான முயற்சிகளை எடுத்திருக்கிறோம். அடுத்தடுத்து தூரத்தை அதிகரிக்கும் முயற்சியிலும் இறங்கியிருக்கிறோம் என்று கூறினார்.

    இந்த டிரோன் ஜிபிஎஸ் மூலம் கட்டுப்படுத்தப்படுவதால் நெட்வொர்க் உள்ளிட்ட தொழில்நுட்பப் பிரச்சனைகள் இருக்காது என்றும், சோதனை முயற்சி செய்யப்பட்ட தரவுகள் அனைத்தையும் அரசுக்கு அனுப்பி வைத்துள்ளதாகவும், அவர்களின் ஒப்புதலுக்காக காத்திருப்பதாகவும் மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....